பசும்பொன் தேவர் ஆன்மீக மேடையில் பேசிய உரை:
தெய்வத்தை இருக்கிறது என்பதை யாராவது பார்த்திருக்கிறார்களா? பார்த்தவர்கள் காட்டியிருக்கிறார்களா? பார்க்க முடியுமா? காட்ட முடியுமா? பார்க்க முடியாத ஒன்றை காட்ட முடியாத ஒன்றை இருக்கிறது என்று சொல்லுவோரை நம்புவது மூடத்தன்மையல்லவா? அது மனிதனை பகுத்தறிவுடையனாக்க நல்ல உணர்ச்சியைத் தருமா? அந்த மூட நம்பிக்கை மனிதனின் வளர்ச்சியைக் கெடுக்காதா? என்று பேசுவது தற்கால நவநாகரிகம்.
அதைப் பரிசீலனை பண்ணிப் பார்ப்போம். நாம் நம் கையைப் பார்க்கிறோம். அதில் ஐந்து விரல்கள் இருக்கின்றன. கையில் ரேகைகள் இருக்கின்றன. கீழே கினிந்து பார்க்கிறோம். கால் இருக்கிறது. அதில் விரல்கள் இருக்கிறது. ஆனால் வேறு ரூபமாக இருக்கிறது. கை நீட்டவும், மடக்கவும், கொடுக்கவும், வாங்கவும் உதவுகிறது. கால் நடக்க உபயோகப் படுகிறது. இதை இரண்டையும் பார்த்தோம். வித்தியாசமாக இருந்தது. ஆகவே ஒன்றை கால் என்றோம். மற்றொன்றைக் கையென்றோம். கண்ணைக் கொண்டு கையையும், காலையும் பார்த்தோம். கண்ணைப் பார்க்க வேண்டுமென்று நினைக்கிறோம். அது முடியுமோ?
நான் பகுத்தறிவுவாதி கை பார்த்தேன் ஐந்து விரல் இருக்கிறது. ஆகையால் கையிருக்கிறது. காலைப் பார்த்தேன் ஐந்து விரல்கள் இருக்கிறது. ஆகையால் கால் இருக்கிறது. கண்ணைப் பார்க்க முடியவில்லை. ஆகையால் கண் இரூக்கிறது இருக்கிறது என்று சொன்னவன் முட்டாள். அப்படியென்று பரிகாசம் பண்ணலாமோ? இப்படி ஒருவன் பிரசங்கம் பண்ணலாமோ? இப்படி ஒருவன் பிரசங்கம் பண்ணினால் அவன் அறிவுடையவன் ஆவானோ?
மனிதனுக்கு எத்தனையோ அவயம் உண்டு அதில் பார்க்க முடிவதும் உண்டு. பார்க்க முடியாததும் உண்டு. கையையும் காலையும் பார்க்க வசதியாகப் படைத்த தெய்வம் கண்ணைப் பார்ப்பதற்கு வசதியான இடத்தில் வைக்கவில்லை. அப்படியானால் கண் இருக்கிறது என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?
அதற்கு உதவ ஒரு கருவி வேண்டும். கண்ணாடி யை எடுத்துப் பார்ப்போமேயானால் கண்ணின் நிழல் அதில் பிரதி பிம்பமாகத் தெரியும். அதை அனுமான பிரமாணமாகத் தெரிந்து கொண்டு அடுத்தவன் கண்ணைப் பிரத்தியட்ச பிரமாணமாகத் தெரிந்து கொண்டு இரண்டையும் கலந்து கண் நமக்கு இருக்கிறது என்று அறிவின் பெயரால் முடிவுக்கு வருகிறோம்.
அதற்குமேல் "மனம்" என்று ஒன்றிருக்கிறது. அதை எல்லோரும் பார்க்க முடியுமா என்றால் முடியாது. "புத்தி" என்ற ஒன்று இருக்கிறது. "அகங்காரம்" என்ற ஒன்றிருக்கிறது. இதற்கெல்லாம் அஸ்திவாராமாக "சித்தம்" இருக்கிறது. இவைகளை நாம் பார்க்க முடியாது. ஆனால் அவைகள் செயல்படுவதன் மூலம், மனம், புத்தி, சித்தம் இருக்கிறது என்று தெரிந்து கொள்கிறோம்.
காஞ்சிபுரத்தில் கூட்டம் நடக்கிறது. அதில் தேவர் பேசுகிறாராம். நாம் போய் கேட்கலாம் என்ற எண்ணத்தை எழுப்பித் தருவது மனம் அப்போது மனம் வேலை செய்கிறது.
அதற்குமேல் அதிக நேரமாயிற்றே நாம் இவ்வளவு பிந்திப்போனால் பிரசங்கம் முடிந்துபோய் இருக்குமோ, என்னவோ? என்று நினைக்கிறபோது புத்தி வேலை செய்கிறது.
அதற்குமேல் இடம் கிடைக்குமோ என்னவோ, கிடைக்காவிட்டால் தள்ளதாவன் இருப்பானேயானால் அவனைத் தள்ளிவிட்டு உட்காருவோம் என்கிறபோது அகங்காரம் வருகிறது. இந்த மூன்றிற்கும் அஸ்திவாரமாகச் சித்தம் இருக்கிறது. இதற்கு அப்பால் உயிர் இருக்கிறது. அதையாராவது பார்த்திருக்கிறார்களா? என்றால் இல்லை.
இப்போது "எக்ஸ்ரே" என்கிற விஞ்ஞானக் கருவி வந்திருக்கிறதே உள்ளேயிருப்பதைப் பார்க்க. அந்தக் கருவி மூலம் உயிரைப் பார்த்திருக்கிறார்களா? என்றால் காணமுடியவில்லை.
கண்ணைக்கொண்டும் உயிரைப் பார்க்க முடியாது. அப்படி இருக்கும் போது நான் அறிஞன் "அறிவற்றவர்கள் உயிரிருக்கிறது என்று நம்புகிறார்கள். உயிர் என்ற ஒன்று இருக்குமேயானால் அதை யாராவது பார்த்திருக்க வேண்டாமா? பார்த்தவன் இருந்தால் அடுத்தவனுக்குக் காட்ட வேண்டாமா? தோழர்களே உயிரைப் பார்க்க முடியாததால் பார்த்தவர்கள் இல்லாததால் அடுத்தவர்களுக்குக் காட்டாததால் உயிர் இருக்கிறது என்று நம்புவது மூட நம்பிக்கை ஆகையால் எனக்கும் உயிரில்லை" என்றால் அறிவாளி என்று ஒத்துக்கொள்ள முடியுமா? தனக்குத் தானே உயிர் இல்லை என்று சொல்லுவானேயானால் மயானத்துக்கு வரலாமே என்றுதான் அவனைக் கூப்பிடுவார்கள்.
ஆகவே பார்க்க முடிகிற பொருளும் உண்டு. பார்க்க முடியாததும் உண்டு.
இப்போது எனக்கு மாலை போட்டார்கள் அதன் ஊடே என்ன இருக்கிறது என்றால் "சிவந்தி பூ" என்று சொல்லலாம், என்ன நிறம் என்றால் "மஞ்சள் நிறம்" என்று சொல்லலாம். சிவந்திப் பூவின் வாசத்தைச் சொல்லு என்றால் அதை முகர்ந்து பார் என்றுதான் சொல்ல முடியுமே தவிர அதனுடைய வாசத்தைச் சொல்ல வார்த்தை கிடையாது. அதேபோல ரோஜா வாசத்தைச் சொல்ல வார்த்தை கிடையாது.
சாக்கரை என்றால் என்ன கேட்டால் உற்பத்தியாகிற இடம் அதை எப்படித் தயாரிக்கிறார்கள் என்று சொல்லலாம். அதனுடைய இனிப்பு எப்படியிருக்கும் என்று சொல்ல வார்த்தையுண்டா? "வாங்கித் தின்று பார்" என்றுதான் சொல்லலாம். இவைகளை எல்லாம் உணர்ச்சியின் பெயரால் மனதில் உறுதி கொள்ள வேண்டுமே தவிர ஒருவருக்கு ஒருவர் சொல்லித் தெரிந்து கொள்ளுவது அல்ல.
அப்படியிருக்கும் போது தெய்வீகம் தெய்வபக்தி என்பதை அவனவன் அனுபவத்தில் கண்டு கொள்ள வேண்டுமே தவிர எனக்குக் காட்டு என்று ஆங்கிலம் படித்த கத்துக் குட்டிகள் ஆங்கிலேயன் கைக்கூலிகள் கேட்டால் அது முறையாகுமா?
தெய்வம் தெய்வீகம் உண்டு என்பதைத்தான் பாரதியார் போன்றவர்கள் சொன்னார்கள். இப்படி மானங்கெட்டுப் போகக் கூடாது என்பதற்குத்தான் ஆன்றோர்கள்.
"முகத்தின் கண்கொண்டு பார்க்கும் மூடர்காள் அகத்தின் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம்" என்றார்கள்

No comments:
Post a Comment