Friday, 31 March 2017

பாலகிருஷ்ண ரெங்கே கமிஷன் பரிந்துரை.


முக்கிய அம்சம்
 தேசிய அளவில் DNT  சீர் மரபினர் தனி ஆணையம் அமைக்க வேண்டும்.

 1)DNT பிரிவில்  உள்ள மக்கள்  அனைவருக்கும் சாதிச் சான்றிதழ் DNT என்கிற   பெயரிலேயே வர வேண்டும்.சாதி சான்றிதழ்களில் பி‌சி. எம்பிசி,ஒபிசி என்று பல்வேறு இடங்களில் மாற்றி தரப் படுகிறது.  அவற்றில் உள்ள குளறுபடிகளை நீக்கி  ஒரே சீராக DNT என்றே தரப்பட வேண்டும்.

2)தலைமைச் செயளாலரைத் தலைவராகக் கொண்டு DNT மக்களுக்கென்று தனி ஆணையம்  அமைக்கப் பட வேண்டும்.அதில் 2 முதல் 3  சீர்மரபினர்  மக்கள் பிரதிநிதிகள் உறுப்பினர்களாகவும் மற்றும் மானுடவியலார் , சமுகவியாளர் (anthropologist & sociologist)  ஆலோசகராக கொண்டு  செயல் பட வேண்டும்.

3)பள்ளிகளில் கல்லூரிகளில் மாணவர்களுக்கு வழிங்கப் படும் சாதிச் சான்றிதழ்கள் மற்றும் கல்வி ஊக்கத்தொகை சான்றிதழ்களில் விபரம் பெரும் கிளர்க்குகள் அலுவலர்கள் அவர்களது அறிவுக்கு தெரிந்த வரையில் பலவிதமாக பதிவு செய்கிறார்கள், இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப் படுவதால்,  சீர் மரபினர் மாணவர்கள் தங்களது ஊர் விஏஓ மற்றும் பஞ்சாயத்து மூலம் சிபாரிசு கடிதம்அல்லது  authorisஎd கடிதம் பெற்று சீர்மரபினர் சான்றிதழ்  பெருவதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

4)சீர்மரபினர் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க வேண்டும்.

5)சீர்மரபினருக்கு என்று  நகர்புறங்களில் வீட்டு வசதி மனைகள் தர வேண்டும். .சீர் மரபினர்கள். கிராமபுர மக்களுக்கு 1 ஏக்கர் நிலம் குத்தகைக்கு தர வேண்டும். நான்கு வழி புறச் சாலைகளை விவசாயத்திற்கு என்று குத்தகைக்கு தர வேண்டும்.

6)சீர்மரபினர் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை ,அவர்களுக்கென்று தனியாக ஆண் ,பெண் இருபாளர்க்கும் தனித்தனியாக  மாணவ மாணவியர் விடுதிகள் ,கல்லூரிகள், அவர்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் அமைத்து தர வேண்டும். அவர்களது மேற்படிப்புக்கான ஊக்கதொகையினை பெற்றுத்தர வேண்டும்.

7)சீர்மரபினர் பெண்கள் சிறு விவசாய வியாபாரிகளாக இருப்பதால் அவர்களுக்கென்று தனி மார்க்கெட் ஏரியா தர வேண்டும். சீர்மரபினர் பெண்கலுக்கு தனியாக சுய உதவி மற்றும் சுய தொழில் உதவிகளை காதி கிராம தொழில்  முனைவோர் மூலமும்,பயிற்சி தந்து ஊக்குவிக்க வேண்டும்.

8)சீர்ம்ரபினர் மக்களின் கலாச்சார பண்பாடுகளை ,பராம்பரியத்தை  காப்பாற்ற வேண்டும்  உதாரணத்திற்கு  ஜல்லிக்கட்டு என்பது பாராம்பரிய  சடங்கு, அதேபோல வனக்குடிகள் வன விலங்குகளி வீட்டு விலங்குகளைபோல பயிற்ச்சி கொடுத்து வளர்ப்பார்கள் இதனை தடை செய்யக் கூடாது.

9)சீர்மரபினர் மக்களை முரடர்களாக ,சமூக பொய்ப்பிரசாரம் செய்யபட்டு வருகிறது. இதனால் அவர்கள் மீது காவல் துறை அடக்குமுறையும், பொய்வழக்குகளும் அதிகமகி வருக்கிறது. SC/ST  மக்களுக்கு உரிய அனைத்து சட்ட பாதுகாப்புகளளை  சீர்மரபினருக்கு வழங்கப்பட வேண்டும்.
சீர்மரபினர் மக்கள் மீது போடப்படும் வழக்குகளை விசாரிக்க உண்மை நிலையினை அறிய,DISTRICT MAGISTRATE மற்றும் DSP கொண்ட ஸ்பெஷல் நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். தவறான போய் வழக்கு என்றால்  பாதிக்கப்பட்ட சீர்மரபினருக்கு  compensation தரப்பட வேண்டும்.

10)சீர்மரபினர் மக்கள் பிரதிநிதிகள் தேசிய மனித உரிமை ஆணையம், மாநில மனித உரிமை ஆணையம் ,மாவட்ட மனித உரிமை ஆணையம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு ,மகளிர் ஆணையங்களிலும் உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

ஆப்பநாடு கொண்டையங் கோட்டை மறவர் பெயர்க் காரணம்: மறவர் சாதியில் பல உட்பிரிவுகளில் ஒன்றுதான் ஆப்பநாடு கொண்டையங் கோட்டை மறவர் என்பது. கொண்டை...