Friday, 31 March 2017

தமிழ்நாட்டின் புரட்சிக் குழுக்கள்

சிற்றூர்களில் வாழும் மக்கள் தங்களுக்குள் அரிகாரன் எனப்படும் ஒற்றர்கள் மூலம் செய்தி பரப்பினர். கூட்டங்கள் கூடி புரட்சி குறித்து முடிவெடுத்தனர். தமிழகத்தில் அமைதியின்மை உருவாகிவிட்டதை அறிந்த மைசூரின் திப்பு சுல்தானும்பிரான்சு நாட்டு நிர்வாகக் குழுவினரும் இரகசியமாகத் தூதர்களை அனுப்பிவைத்தனர். இதன் விளைவாகவிருப்பாச்சி கோபால நாயக்கர்தலைமையில் பழனியிலும்,மருதுபாண்டியர் தலைமையில்சிவகங்கையிலும்மயிலப்பன்தலைமையில் இராமநாதபுரத்திலும், சிவகிரியின் மாப்பிள்ளை வன்னியத்தேவர் மற்றும்பாஞ்சாலங்குறிச்சியின் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோர் தலைமையில் திருநெல்வேலியிலும்குழுக்கள் தோற்றுவிக்கப்பட்டன. இதே நேரம் தென்னிந்தியாவின் பிற பகுதிகளிலும் இத்தகைய புரட்சிக் குழுக்கள் தோன்றின. குறிப்பாக மலபாரில் கேரள வர்மா, கன்னட தேசத்தில் விட்டலஹெக்டே, அரிசிக்கரையில் கிருஷ்ணப்ப நாயக்கர், பெல்ஹாமில் தூந்தாஜி வாக்ஆகியோர் தலைமையில் குழுக்கள் உருவாயின.

No comments:

Post a Comment

ஆப்பநாடு கொண்டையங் கோட்டை மறவர் பெயர்க் காரணம்: மறவர் சாதியில் பல உட்பிரிவுகளில் ஒன்றுதான் ஆப்பநாடு கொண்டையங் கோட்டை மறவர் என்பது. கொண்டை...