தாய்வழி உறவு முறைச் சமூகங்கள்
இன்று தமிழகத்தில் தாய்வழி உறவு முறைச் சமூகங்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. கோட்டைப் பிள்ளைமார்,செவளைப் பிள்ளைமார்,இல்லத்துப்பிள்ளைமார், நாங்குடி வேளாளர், நாஞ்சில் நாட்டு வேளாளர்,அரும்புக் கட்டி வேளாளர், அம்பொனேரி மறவர், காரண மறவர், கொண்டையங் கோட்டை மறவர், ஆப்பனாடு கொண்டையங் கோட்டை மறவர்,[1]கிறித்துவ மறவர், செறுமர், அய்யனவர்,செக்கலவர், கயலர், மரைக்காயர்போன்றவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள்.
இலங்கையில் முக்குவர், சோனகர்,கிழக்குத் தமிழர்கள் ஆகியோர்களும் தாய்வழி உறவு முறைகளையே கடைப்பிடிக்கின்றனர்.
திருமண உறவுகள்
தாய்வழி உறவு முறைச் சமூகங்களில்திருமணம் நிகழ்வுகளுக்காக குறிப்பிட்ட சமூகங்களின் தாயும், குழந்தைகளும் ஒரே பிரிவினராக இருப்பதால் அந்தப் பிரிவின் மாற்றுப் பிரிவுகளில் உள்ளவர்களுடன் திருமண உறவுகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பிரிவில் தாயுடன் பிறந்த தாய்மாமன் ஒரே பிரிவில் இருப்பதால் இந்தச் சமூகங்களில் பெண்ணிற்குத் தாய்மாமன்களை மணம் முடிக்கும் வழக்கம் இல்லை. தாய்மாமன்கள் சகோதர முறையாகவே கடைப்பிடிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment