Friday, 31 March 2017

அரசியல் அறிஞரே-ஆன்மிகச் சித்தரே
இஸ்லாத்தால் வளர்ந்தவரே-ஈகைக்குணம் கொண்டவரே
உள்ளத்தால் உயர்ந்தவரே-ஊருக்கு உழைத்தவரே
எட்டுத்திக்கும் முழங்கியவரே-ஏழாமறிவு பெற்றவரே
ஒழுக்கத்தில் சிறந்தவரே-ஓம்முருகாவின் பக்தரே
ஒளவைசொல் கற்றவரே-தேவரே
முக்குலத்தின் தெய்வமே-முத்துராம லிங்கமே
கதராடை விரும்பியவரே-காங்கிரசை  எதிர்த்தவரே
கிருத்துவப்பள்ளியில் பயின்றவரே-கீர்த்தி நிறைந்தவரே
கெத்தாகப் பேசியவரே-கேட்போரை உருகவைத்தவரே
கொடையில் சிறந்தவரே-கோமானை எதிரத்தவரே
கௌரவமாய் வாழ்ந்தவரே-தேவரே
முக்குலத்தின் தெய்வமே-முத்துராம லிங்கமே
உன்வழி  நடக்க-உன்னருள் கிடைக்க
சோதனை கடந்து-தடை தகர்த்து
மாலை அணிந்து-விரதம் இருந்து
பாற்குடம் சுமந்து-பாலாபிஷேகம் செய்து
உன்னருள் வேண்டி-உன்புகழ்பாடி
உன்னாலயம் கண்டு-உன்திருவடி தொட்டு
வணங்குவோமே-வணங்குவோமே!
                                                      By  ச.கோபிநாதன்           

No comments:

Post a Comment

ஆப்பநாடு கொண்டையங் கோட்டை மறவர் பெயர்க் காரணம்: மறவர் சாதியில் பல உட்பிரிவுகளில் ஒன்றுதான் ஆப்பநாடு கொண்டையங் கோட்டை மறவர் என்பது. கொண்டை...