Friday, 31 May 2019

பகதூர் வெள்ளையத்தேவரின் 250 வது பிறந்தநாள் விழா

இன்று 31.05.2019 பாஞ்சை தளபதி பகதூர் வெள்ளையத்தேவரின் 250 வது பிறந்தநாள் விழா..

இரண்டாம் ஆண்டாக அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது...

மாவீரர் வெள்ளையத்தேவன் :

அடலேறு மங்கலத்தேவரின் ஒரே மகன் நம் முக்குல மாவீரர் வெள்ளையத்தேவன். ஒப்பற்ற வீரமும் தீரமும் உள்ளவர். சிலம்பாட்டம்,மல்யுத்தம்,வாள்வீச்சு ,வேல்வீச்சு ,குதிரை யேற்றம், யானை யேற்றம், வளரி வீசுதல் ,கவன் எறிதல் போற்ற கலைகளில் வல்லவர். நாட்டு மக்கள் அனைவரும் போற்றும் பேரும் புகழும்  பெற்றவர்.வீரத்தின் இலக்கணம் ,விவேகத்தின்    மறுப்பிறப்பு.அவர் கூறிய கொம்புகளுடன் சீறிப்பாயும் முரட்டுக்காளையை  அடக்குவதிலே வல்லவர்.

வெள்ளையத்தேவரின் பதினெட்டாம் வயதில் சாயல்குடியில் சீமை மறவன் திடலில் நடந்த மஞ்சுவிரட்டில் யாருமே அடக்கு முடியாத சீனிக்காளையை அடக்கினார்.  பிறகு ஒருநாள் இரவு தூக்கம் களைந்ததால் ஊரின் வயல்வெலியொரம்  நடந்து செல்லும்போது   ஏறத்தாழ முப்பது திருடர்கள்  காவல்க்காரர்களை கட்டிப்போட்டுவிட்டு ஆட்டுப்பட்டிக்குள் புகுந்து  ஆடுகளை திருடிக்கொண்டு செல்லும்போது  ஆட்டுப்பட்டியின் வாயிலை அடைத்துவிட்டு மின்னல் வேகத்தில் தன் வேல்க்கம்பை சுழற்றினார். சிறிது நேரம் கடும் சண்டை. முடிவில் தனி ஒருவராக திருடர்களை தாக்கி கைக்கால்களை கட்டி ஆட்டுப்பட்டியின் வாயிலில் படுக்கவைத்திருந்தார். காலையில் இளவரசரின் வீரத்தை கண்டு நாட்டு மக்கள் நன்றி சொல்லி பாராட்டினர்.

சொக்கி என்ற சுந்தரவள்ளி.

 பார்வையிலையே எதிரியை கொல்லும் வீர நாச்சியார். முதல்நாள் இரவில் முளைப்பாரி திருவிழாவில் மானோ மயிலோ என்று துள்ளிக்குதித்து தன் தோழிகளுடன் ஆடினாள் சொக்கி. அவ்விளம் நங்கையருக்கு பதிலடி தரும்படி எதிரணியில் ஆடிய இளங்காளை வெள்ளையத்தேவனின்  வசீகர தோற்றத்தில் மயங்கி காதல்க்கொண்டு   அவரின் நினைவிலையே அன்ன நடை நடந்து குளத்தில் தண்ணீர் மொண்டு எடுக்கும்போது தவறி விழுந்து கத்தினால். அவ்வழியே வந்த வெள்ளையத்தேவன் அந்த சத்தத்தை கேட்டு  அவ்விடத்திற்கு வருமுன்னே   வேங்கை ஒன்று வந்து சொக்கி என்ற வெள்ளையம்மாளை தாக்க முயன்றது .

 வேங்கையின் வேகத்தை விட பாய்ந்துவந்து வெள்ளையத்தேவன் அதனை தாக்கினார். அவரின் பிடியில் வேங்கை மாட்டிக்கொண்டது. தன் இரும்புக்கரத்தால் வேங்கையை அடித்து  தன் இடுப்பில் இருந்த கட்டாரியால் தாக்கி வேங்கையை கொன்றார்.

இதனைக்கண்ட சொக்கி மயங்கி தண்ணீரில் விழும்   காட்சியை கண்டு அவளை காப்பாற்றினார் வெள்ளையத்தேவன்.  வேங்கையால் ஏற்ப்பட்டதன் உடலில் இருக்கும் காயத்தை பொருட்படுத்தாமல்  சொக்கியை தன் தோளில் தூக்கிவைத்துக்கொண்டு ஊருக்குள் நடந்துவந்துக்கொண்டிருந்தார். இந்த நேரத்தில் தண்ணீர் எடுக்க சென்ற சொக்கியை வெகுநேரம் ஆகியும் காணும் என்பதால் அவளின் அப்பா இராமையா தேவர்  ,தாத்தா அருனாச்சலத்தேவர்  எதிரே வந்தனர். பிறகு வைத்தியப்பெண்களால்  முதலுதவி செய்யப்பட்டு சொக்கி மயக்கம் தெளிந்தாள் சொக்கி , ஊரே திரண்டு இருந்தது.

அனைவரும் வெள்ளையத்தேவனை  மாலைமரியாதை செய்து  பாராட்டினார்கள் .

இந்த நேரத்தில் வெள்ளையத்தேவரை அரண்மனைக்கு அழைத்துவர கட்டபொம்மன் தூது அனுப்புகிறார். வெள்ளையத்தேவருடன்  வெள்ளையம்மாளின் அப்பா இராமையாத்தேவரும் செல்கிறார். உடம்பில் காயங்களுடன் வரும் வெள்ளையத்தேவரை கண்டு கட்டபொம்மன் துடித்துப்போகிறார்.

 நடந்த சம்பவத்தை அரசபையில்  இராமையாத்தேவர் விளக்குகிறார். வீரத்தளபதி வெள்ளையத்தேவர்  வாழ்க என்று கட்டபொம்மனே  கோஷமிடுகிறார்.. அனைவரும் பாராட்டிக்கொண்டிருக்கும் நேரத்தில் இராமையாத்தேவர்  " வெள்ளையத்தேவர் வெள்ளையம்மாள் "  திருமணத்தை அறிவிக்கிறார். கட்டபொம்மன் முன்னிலையில் மங்கலத்தேவரின் அரண்மனையில் வெள்ளையத்தேவனின் திருமணம் சீரும் சிறப்புமாக நாடே வியக்கும்வண்ணம் நடைபெறுகிறது..

Saturday, 23 September 2017

பசும்பொன் தேவர் திருமகனார் தெய்வத்தை காட்ட முடியுமா? என்று கேட்ட பெரியாருக்கு தேவர் கொடுத்த பதிலடி

பசும்பொன் தேவர் ஆன்மீக மேடையில் பேசிய உரை:

தெய்வத்தை இருக்கிறது என்பதை யாராவது பார்த்திருக்கிறார்களா? பார்த்தவர்கள் காட்டியிருக்கிறார்களா? பார்க்க முடியுமா? காட்ட முடியுமா? பார்க்க முடியாத ஒன்றை காட்ட முடியாத ஒன்றை இருக்கிறது என்று சொல்லுவோரை நம்புவது மூடத்தன்மையல்லவா? அது மனிதனை பகுத்தறிவுடையனாக்க நல்ல உணர்ச்சியைத் தருமா? அந்த மூட நம்பிக்கை மனிதனின் வளர்ச்சியைக் கெடுக்காதா? என்று பேசுவது தற்கால நவநாகரிகம்.

அதைப் பரிசீலனை பண்ணிப் பார்ப்போம். நாம் நம் கையைப் பார்க்கிறோம். அதில் ஐந்து விரல்கள் இருக்கின்றன. கையில் ரேகைகள் இருக்கின்றன. கீழே கினிந்து பார்க்கிறோம். கால் இருக்கிறது. அதில் விரல்கள் இருக்கிறது. ஆனால் வேறு ரூபமாக இருக்கிறது. கை நீட்டவும், மடக்கவும், கொடுக்கவும், வாங்கவும் உதவுகிறது. கால் நடக்க உபயோகப் படுகிறது. இதை இரண்டையும் பார்த்தோம். வித்தியாசமாக இருந்தது. ஆகவே ஒன்றை கால் என்றோம். மற்றொன்றைக் கையென்றோம். கண்ணைக் கொண்டு கையையும், காலையும் பார்த்தோம். கண்ணைப் பார்க்க வேண்டுமென்று நினைக்கிறோம். அது முடியுமோ?

நான் பகுத்தறிவுவாதி கை பார்த்தேன் ஐந்து விரல் இருக்கிறது. ஆகையால் கையிருக்கிறது. காலைப் பார்த்தேன் ஐந்து விரல்கள் இருக்கிறது. ஆகையால் கால் இருக்கிறது. கண்ணைப் பார்க்க முடியவில்லை. ஆகையால் கண் இரூக்கிறது இருக்கிறது என்று சொன்னவன் முட்டாள். அப்படியென்று பரிகாசம் பண்ணலாமோ? இப்படி ஒருவன் பிரசங்கம் பண்ணலாமோ? இப்படி ஒருவன் பிரசங்கம் பண்ணினால் அவன் அறிவுடையவன் ஆவானோ?

மனிதனுக்கு எத்தனையோ அவயம் உண்டு அதில் பார்க்க முடிவதும் உண்டு. பார்க்க முடியாததும் உண்டு. கையையும் காலையும் பார்க்க வசதியாகப் படைத்த தெய்வம் கண்ணைப் பார்ப்பதற்கு வசதியான இடத்தில் வைக்கவில்லை. அப்படியானால் கண் இருக்கிறது என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?

அதற்கு உதவ ஒரு கருவி வேண்டும். கண்ணாடி யை எடுத்துப் பார்ப்போமேயானால் கண்ணின் நிழல் அதில் பிரதி பிம்பமாகத் தெரியும். அதை அனுமான பிரமாணமாகத் தெரிந்து கொண்டு அடுத்தவன் கண்ணைப் பிரத்தியட்ச பிரமாணமாகத் தெரிந்து கொண்டு இரண்டையும் கலந்து கண் நமக்கு இருக்கிறது என்று அறிவின் பெயரால் முடிவுக்கு வருகிறோம்.

அதற்குமேல் "மனம்" என்று ஒன்றிருக்கிறது. அதை எல்லோரும் பார்க்க முடியுமா என்றால் முடியாது. "புத்தி" என்ற ஒன்று இருக்கிறது. "அகங்காரம்" என்ற ஒன்றிருக்கிறது. இதற்கெல்லாம் அஸ்திவாராமாக "சித்தம்" இருக்கிறது. இவைகளை நாம் பார்க்க முடியாது. ஆனால் அவைகள் செயல்படுவதன் மூலம், மனம், புத்தி, சித்தம் இருக்கிறது என்று தெரிந்து கொள்கிறோம்.

காஞ்சிபுரத்தில் கூட்டம் நடக்கிறது. அதில் தேவர் பேசுகிறாராம். நாம் போய் கேட்கலாம் என்ற எண்ணத்தை எழுப்பித் தருவது மனம் அப்போது மனம் வேலை செய்கிறது.

அதற்குமேல் அதிக நேரமாயிற்றே நாம் இவ்வளவு பிந்திப்போனால் பிரசங்கம் முடிந்துபோய் இருக்குமோ, என்னவோ? என்று நினைக்கிறபோது புத்தி வேலை செய்கிறது.

அதற்குமேல் இடம் கிடைக்குமோ என்னவோ, கிடைக்காவிட்டால் தள்ளதாவன் இருப்பானேயானால் அவனைத் தள்ளிவிட்டு உட்காருவோம் என்கிறபோது அகங்காரம் வருகிறது. இந்த மூன்றிற்கும் அஸ்திவாரமாகச் சித்தம் இருக்கிறது. இதற்கு அப்பால் உயிர் இருக்கிறது. அதையாராவது பார்த்திருக்கிறார்களா? என்றால் இல்லை.

இப்போது "எக்ஸ்ரே" என்கிற விஞ்ஞானக் கருவி வந்திருக்கிறதே உள்ளேயிருப்பதைப் பார்க்க. அந்தக் கருவி மூலம் உயிரைப் பார்த்திருக்கிறார்களா? என்றால் காணமுடியவில்லை.

கண்ணைக்கொண்டும் உயிரைப் பார்க்க முடியாது. அப்படி இருக்கும் போது நான் அறிஞன் "அறிவற்றவர்கள் உயிரிருக்கிறது என்று நம்புகிறார்கள். உயிர் என்ற ஒன்று இருக்குமேயானால் அதை யாராவது பார்த்திருக்க வேண்டாமா? பார்த்தவன் இருந்தால் அடுத்தவனுக்குக் காட்ட வேண்டாமா? தோழர்களே உயிரைப் பார்க்க முடியாததால் பார்த்தவர்கள் இல்லாததால் அடுத்தவர்களுக்குக் காட்டாததால் உயிர் இருக்கிறது என்று நம்புவது மூட நம்பிக்கை ஆகையால் எனக்கும் உயிரில்லை" என்றால் அறிவாளி என்று ஒத்துக்கொள்ள முடியுமா? தனக்குத் தானே உயிர் இல்லை என்று சொல்லுவானேயானால் மயானத்துக்கு வரலாமே என்றுதான் அவனைக் கூப்பிடுவார்கள்.

ஆகவே பார்க்க முடிகிற பொருளும் உண்டு. பார்க்க முடியாததும் உண்டு.

இப்போது எனக்கு மாலை போட்டார்கள் அதன் ஊடே என்ன இருக்கிறது என்றால் "சிவந்தி பூ" என்று சொல்லலாம், என்ன நிறம் என்றால் "மஞ்சள் நிறம்" என்று சொல்லலாம். சிவந்திப் பூவின் வாசத்தைச் சொல்லு என்றால் அதை முகர்ந்து பார் என்றுதான் சொல்ல முடியுமே தவிர அதனுடைய வாசத்தைச் சொல்ல வார்த்தை கிடையாது. அதேபோல ரோஜா வாசத்தைச் சொல்ல வார்த்தை கிடையாது.

சாக்கரை என்றால் என்ன கேட்டால் உற்பத்தியாகிற இடம் அதை எப்படித் தயாரிக்கிறார்கள் என்று சொல்லலாம். அதனுடைய இனிப்பு எப்படியிருக்கும் என்று சொல்ல வார்த்தையுண்டா? "வாங்கித் தின்று பார்" என்றுதான் சொல்லலாம். இவைகளை எல்லாம் உணர்ச்சியின் பெயரால் மனதில் உறுதி கொள்ள வேண்டுமே தவிர ஒருவருக்கு ஒருவர் சொல்லித் தெரிந்து கொள்ளுவது அல்ல.

அப்படியிருக்கும் போது தெய்வீகம் தெய்வபக்தி என்பதை அவனவன் அனுபவத்தில் கண்டு கொள்ள வேண்டுமே தவிர எனக்குக் காட்டு என்று ஆங்கிலம் படித்த கத்துக் குட்டிகள் ஆங்கிலேயன் கைக்கூலிகள் கேட்டால் அது முறையாகுமா?

தெய்வம் தெய்வீகம் உண்டு என்பதைத்தான் பாரதியார் போன்றவர்கள் சொன்னார்கள். இப்படி மானங்கெட்டுப் போகக் கூடாது என்பதற்குத்தான் ஆன்றோர்கள்.

"முகத்தின் கண்கொண்டு பார்க்கும் மூடர்காள் அகத்தின் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம்" என்றார்கள்

"காந்தியை சுட்டுக்கொலை செய்த போது நடந்த கலவரத்தை பசும்பொன் தேவர் தடுத்தார்"

1948 காந்திஜீ கொலை செய்யப்பட்ட போது ஊரை ஒரு முஸ்லீம் தான் கொலை செய்தான் என்று வதந்தி பரவியது காந்திஜீயை சுட்டது முஸ்லீம் தான் என்று பொய் பிரச்சாரங்கள் செய்யப்பட்டது பொது மக்கள் முஸ்லீம்களை தாக்கியும் அவர்களது கடையை அடித்து நொறுக்கியும் கலவரத்தில் ஈடுபட்டனர்.

மதுரையை சுற்றியுள்ள ஊர்களில் அப்பாவி முஸ்லீம்கள் தாக்கப்பட்டனர் அதை தடுத்து நிறுத்தும் நோக்கத்துடன் சுட்டது இஸ்லாமியர் இல்லை இந்து தான் என்பதை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் விதமாக பொதுக்கூட்டம் போட்டு உண்மையை விளக்கினார்.

முத்துராமலிங்க தேவர்  இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலை நிறுத்த தெரு தெருவாக பிரச்சாரம் செய்யவும் ஊர்வலங்கள் நடத்தவும் தேவர் தனது தொண்டர்களை அனுப்பி வைத்தார்.

காந்தியை ஒரு இஸ்லாமியர் கொன்று விட்டார் என்ற வதந்தியால் அப்பாவி முஸ்லீம்கள் தாக்கப்பட்டு விடக் கூடாது என்று பிரச்சாரம் செய்த அதே தேவர். இந்துப் பெண்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதற்காக முஸ்லீம் இளைஞர்களை தண்டிக்கத் துணிந்தவர்.

எங்களுக்கு எல்லா மதங்களும் சமமே. மதம் என்பது அடையாளமே. இனம் என்பதே தலை. இந்துக்களாக இருப்போம். இந்துக்களுக்கு மரியாதை தருவோம்.

இஸ்லாமியராக இருப்பவரையும் அரவணைப்போம். அவர்களுக்கு மரியாதை தருவோம்.

"பசும்பொன் உ. முத்துராமலிங்க தேவர் அவர்கள் மாபெரும் தேசத்தலைவர்"

1952 ஆண்டு முத்துராமலிங்க தேவர் அவர்கள் பொது கூட்டங்களில் ஒரு செய்தியை சொன்னார்கள் அது " நேதாஜி அவர்கள் உயிருடன் இருக்கிறார் எந்த நேரத்திலும் வருவார் " என்பதுதான்.
இதை கேட்ட நேரு அவர்களுக்கு பயம் ஏற்பட்டது . மத்திய அரசு ஒரு கமிஷனை அமைத்தது. நேதாஜி உயிரோடு இருப்பதை முத்துராமலிங்க தேவர் அவர்கள் அந்த கமிஷனிடம் தெரிவிக்கவேண்டும் என்று அந்த கமிஷன் அறிவித்தது.

அதற்கு தேவர் அவர்கள் " இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியிடம் தொடர்பு வைத்திருந்த தலைவர்களை பிடித்து நேசநாடுகளிடம் (அமெரிக்கா ,இங்கிலாந்து ,ரஷிய) ஒப்படைக்கவேண்டும் என்ற ஒப்பந்தம் ஒன்று இருக்கிறது அதில் நேதாஜி அவர்களின் பெயர் இருக்கிறதா என்பதை மத்திய அரசு அறிவித்தால் நான் கமிஷனிடம் சாட்சியம் அளிக்கமுடியும் " என்று சொன்னார்கள் .

மத்திய அரசும் அதுகுறித்து விளக்கம் அளிக்கவில்லை. தேவர் அவர்களும் கமிஷனில் சாட்சியம் அளிக்கவும் இல்லை.

நேதாஜி எந்தநேரத்திலும் வந்தால் தனது ஆட்சிக்கு ஆபத்து என்ற பயத்தில் தேவர் அவர்கள்மீது பொய்யான வழக்கை அன்றைய முதல்வர் காமராஜரை போடவைத்தவர் நேரு. இந்த வழக்கு பொய் வழக்கு என்று நீதிமன்றமே அறிவித்தது.

தேவர் ஒன்றும் பெரியாரை போன்று, காமராஜரை போன்று குண்டுச்சட்டி தலைவரும் அல்ல. எடுபிடுயும் அல்ல. அவர் மாபெரும் உலக தலைவர் .

இந்திய தேசிய ராணுவம் (INA ) அமைப்பதற்கு மூலகாரணம் தேவர் அவர்கள். அந்த ராணுவத்தில் 80 சதவீதம் தமிழர்கள் இருந்து போரிட்டனர். இது யாரால் தேவர் அவர்களால்..

ஜெர்மனி அதிபர் ஹிட்லர் முத்துராமலிங்க தேவர்களை சந்திக்கவேண்டும் என்று விரும்பி அவரை ஜெர்மனிக்கு அழைத்து " உங்களுக்கு மக்களிடம் உள்ள செல்வாக்கை அறிந்தேன். நீங்கள் உறுதிகொடுத்தால் நான் இந்திய தேசிய ராணுவத்திற்கு உதவிசெய்கிறேன் என்றார் " அதற்கு தேவர் அவர்கள் " உங்கள் உதவிக்கு எங்கள் நாட்டை நீங்கள் கேட்கக்கூடாது " என்று உறுதிவாங்கினார் ஹிட்லரிடம் .

ஹிட்லரிடம் நேரில் பேசியவர்கள் இரண்டு இந்தியர்கள்மட்டுமே. ஒன்று நேதாஜி இன்னொருவர் அய்யா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள்

பர்மா எல்லை பிரச்சனைக்கு தாய்லாந்துடன் பேசுவதற்கு பர்மா அரசாங்கம் முத்துராமலிங்கத்தேவர் அவர்களைத்தான் அழைத்தது. காமராஜரையோ ,பெரியரையோ அல்ல...

முத்துராமலிங்க தேவர் அவர்களோடு ஒப்பிட்டு பார்ப்பதற்கு பெரியார் தகுதியானவர் கிடையாது.

தேவர் பக்தனின் வேண்டுகோள்!

தேவர் இன மக்களே ஒரு 5 நிமிடம் ஒதுக்கி இந்த பதிவை படியுங்கள் (கள்ளர்,மறவர்,அகமுடையர்) முக்குலத்தோர்.தேவரின மக்கள் முவேந்தர்கள் ஆகிய (சேர,சோழ,பாண்டிய) மன்னர்களின் வம்சாவளியினர் (கள்ளர்,மறவர்,அகமுடையர்).உலகிலேயே முதன் முதலாக தோன்றிய அதி குடி முக்குலத்தோர் கள்ளர்களின் DNA முலம் கடந்த 2010-ம் ஆண்டு நிருபிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் வெள்ளைக்காரனுக்கு எதிராக முதலில் போரிட்ட மாவீரர் புலித்தேவர் நமது தேவர் இனம்.சிவகங்கை சீமையில் வெள்ளையனை எதிர்த்து போரிட்ட மாமன்னர் மருதுபாண்டியர்கள் நமது தேவர் இனம் உலகிலேயே முதன் முதலாக அணை காட்டிய கரிகாலச்சோழன் நமது தேவர் இனம்.இலங்கை முதல் இமயமலை வரை ஆட்சி செய்த இராஜராஜசோழன் நமது தேவர் இனம் .உலகத்தில் உள்ள 7 கண்டத்திலும் வாழும் ஓரே இனம் நமது தேவர் இனம்.வெள்ளையனுக்கு எதிராக முதல் முதலாக போரிட்ட வேலு நாச்சியார் நமது தேவர் இனம்.மருதுபாண்டிய மன்னர்களுக்காக உயிர் தியாகம் செய்த வாலுக்குவேலி அம்பலம் நமது தேவர் இனம் தனக்கு சொந்தமான 32 கிராமங்களை ஏழை மக்களுக்காக அர்ப்பணித்த பசும்பொன் உ முத்துராமலிங்கத்தேவர் ஐயா நமது தேவர் இனம். கல்வி தந்தை என அழைக்கப்படும் பி கே முக்கையாத்தேவர் நமது தேவர் இனம் .இப்படி எல்லாம் இருக்கின்ற நமது தேவர் இனத்தில் ஒற்றுமை இல்லாத காரணத்தால் இன்று நாம் அனைவரும் மற்றனுக்கு கொடி பிடித்து கொண்டு இருக்கிறோம். இலங்கையில் இருந்து வந்த மலையாளி எம்ஜிஆர் பெயரை மதுரை மாட்டுத்தவாணி பேருந்து நிலையத்துக்கும் வைக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர் எம்ஜிஆர் என்கிற மலையாளிக்கு நமது பாட்டன் சொத்துக்களை எல்லாம் கொள்ளையடித்து விழா நடத்துக்கிறார்கள் எம்ஜிஆர் என்ன சுதந்திரப் போராட்ட தியாகி இல்லை அப்புறம் எதற்கு விழா ? தமிழகத்தில் ஒரு தெலுங்கர் பெரியார் வைத்து அரசியல் செய்கிறார்கள் அதற்கு நாம் துணை போய் கொண்டு இருக்கிறோம் திராவிட கட்சிகள் நமது உரிமையை பாரிக்கின்றன.திராவிட கட்சிகள் தேவர் ஜெயந்திக்கு 144 தடை பொடுகின்றன (144 தடை என்பது திவிரவாதிகளுக்கும் போட கூடியது)ஏன்? தெய்விக திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா ஜெயந்தி விழாக்கு 144தடை ? பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா தேச தலைவர் அவர் ஜெயந்தி விழாக்கு ஏன் தடை ? காரணம் உள்ளது கள்ளர் மறவர் அகமுடையர் ஒற்றுமையாக இருக்க கூடாது என்பதற்க்காக தான் உலகிலேயே எந்த ஒரு தேச தலைவர்க்கும் தனது ஜெயந்தி விழாவில் பலலட்சம் மக்கள் கூடுவதில்லை.ஆனால் தேச தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்களின் ஜெயந்தி விழாக்கு பலலட்சம் மக்கள் கூடுகிறார்கள். மக்கள் கூடக்குடாது என்பதற்காகத்தான் மேலும் தேவரின மக்களை திராவிட கட்சிகள் பிரித்துவைத்துள்ளனர் தேவர் இன மக்கள் அனைவருமே 40 வருடங்களுக்கு முன்பு DNT (Denotified Tribes) என்று தான் இருந்தோம் பிறகு எம்ஜிஆர் DNT ல இருந்து DNC மாற்றி பல சலுகைகள் பரிக்கப்பட்டன நமது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்களின் அகில இந்தியா பார்வேர்டு பிளாக் கடந்த 1939 ம் ஆண்டு நமது தேச தந்தை மாவீரர் நேதாஜி மற்றும் முக்குலத்தோரின் தெய்வம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்களால் உருவாக்கப்பட்டது .இந்த அகில இந்தியா பார்வர்டு பிளாக் கட்சியில் தான் நமது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா மற்றும் பி கே முக்கையாத்தேவரும் (MLA MP) மற்றும் இருவரும் அகில இந்தியா பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் ஆகவும் இருந்து பல சாதனை புரிந்துள்ளனர் நமது தேவர் இனத்தில் பல கட்சிகள் உள்ளன அதேபோல் பார்வர்டு பிளாக் கட்சிகளிலும் பல கட்சிகள் உள்ளன .இனி நாம் தேவரின அனைத்து கட்சிகளையும் தேவர் ஐயாவின் அகில இந்தியா பார்வர்டு பிளாக் கட்சியுடன் ஒண்றினைத்து நமக்கான புதிய விடியாளை நோக்கி பயணிப்போம் விரைவில் DNC ல இருந்து DNT மிட்டெடுப்போம் அனைத்து திராவிட கட்சிகள் மற்றும் இதர கட்சிகள் அனைத்தையும் புறக்கணிப்போம் .நமக்கான தேவர் ஐயா அவர்களின் புலிக்கொடி தாங்கிய அகில இந்தியா பார்வர்டு பிளாக் கட்சியில் இணைவோம் வரும் (30-10-2017) தேவர் ஜெயந்திக்குள் ஒன்று படுவோம்
""ஜெய்ஹிந்த் "" இந்த பதிவை மிக மிக அதிகமாக பகிரவும்

*மருத்பலன்*= *மர்தான்*= *மறவன்*( *தேவர்கள்*=* *அமரர்கள்*) *தேவன் என்பது பட்டமல்ல பிறப்பு*

*மருத்பலன்*=
*மர்தான்*=
*மறவன்*(
*தேவர்கள்*=*
*அமரர்கள்*)
*தேவன் என்பது பட்டமல்ல பிறப்பு*

மறவர்களை தேவர்கள் என சங்க இலக்கியங்கள் முதல் தேவர்கள் என அழைக்கபடுவது வழக்கமாக உள்ளது.
'மறவர்' என்ற சொல்லுக்கு இலக்கணமாக வஞ்சம் இல்லாத நெஞ்சும்,தன்மான உணர்வும் கொண்டவர்கள் என்று கூறப்பட்டிருக்கின்றது.

சங்க காலம் முதல் சேர,சோழ,பாண்டியப் பேரரசுகள் நிலைத்து நிற்கவும்,வெற்றிகள் பல பெறவும் காரணமாக வாளும்,தோளும் துனையென்று,களம் பல கண்டு அவர்கள் சிந்திய குருதி ஆற்றின் மீது தான் நம் தமிழ் மன்னர்கள் வெற்றி கண்டு வந்திருக்கின்றனர்.

"போரெனிற் புகலும் புனைகழல் மறவர்"(புறம்:182)

இன்னோர் புறப்பாடலில் போர்க்களங்களில் இரவில் களத்திலே உறங்கும் நெஞ்சுறுதி கொண்டதாக பாடல் ஒன்று கூறுகின்றது.

இன்று பல ஈனர்கள் இந்த தேவர் என்னும் பட்டம் அவனுக்கு இருக்கிறது இவனுக்கு இருக்கிறது ஒரு கிழ்மகனுக்கு உள்ளது என வக்கிரகேலிகளை வலைதளங்களில் கானலாம். இந்த வஞ்ச பொறாமையை என்னவென்று கூறுவது.

*தேவர் என்பது பட்டபெயர் தானா அல்லது காரணப்பெயரா*?

ஏனெனில் ஒரு அடையாளப்பெயர் நிச்சயமாக பலரும் சூடும் பட்டப்பெயராக இருக்காது. தொழிலின் அடிப்படையிலே சாதிப்பெயர்கள் தோன்றியதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர் மருத்துவன்,காவலன்,புலவன்,பாணன் என்பது போல நிச்சயமாக இந்த "தேவர்" என்னும் பெயர் நிச்சயமாக பட்டப்பெயராக இது காரணப்பெயராக பன்புபெயராக மட்டுமே இருக்கும் ஏனெனில் அது பட்டப்பெயர் நிலைக்காது. இன்று ஒரு பனக்காரனாக இருப்பவன் நாளை ஏழை ஆகலாம் அனால் அவனது இனப்பெயர் என்றும் மாறாது.

எனவே "தேவர்" என்பது பன்பு பெயர்தான் என இங்கு சில மேற்க்கோள்களின் மூலம் விளக்கலாம்.

நம்மை தமிழ் மொழி "மறவர்" எண்கின்றது. இதைப்போல் தமிழில் வரும் பல சொற்க்கள் சம்ஸ்கிருதத்திலும் உள்ளது எடுத்துக்காட்டாக "ராஜா" "அரசர்", "ராஜ்ஜியம்","அரசாங்கம்" என ஒரே அர்த்ததையும் உச்சரிப்பையும் கொண்ட வார்த்தைகள் பல உள்ளது.

*தமிழ் அகராதி*

மறம்=வீரம்,கொலை
மறத்தொழில்=கொலைத்தொழில்
மறவன்=கொலை செய்தவன்,வீரன்
என்பதை போல

*மறவர்*=
*தேவர்*(
*அமரர்கள்*)
சம்ஸ்கிருதத்தில்: மாறோ=கொலை
மரணம்=கொலை,இறத்தல்
மர்தான்= மறவன்,கொலை தொழில் புரி வீரன்
மகிஷாசுரமர்த்தினி= மகிடனை கொன்ற தேவி
மர்த்தினி என்றால் கொலை செய்தவள் என அம்பாளை குறிக்கும். இதன் தமிழ் பதம் மறத்தி என்பதாகும்.

மர்த்தினி என்பதற்க்கு ஆண்பதம் தான் மர்தான் ஆதாவது திரிபுரமர்த்தனன் என திரிபுர சம்காரம் செய்த அழித்தலை தொழிலை கொண்ட ஈசனையே மர்தான் என அழைக்கிறது சமஸ்கிருதம்.

ஆகவே மர்தான் என்பவர்கள் சிவனின் மைந்தனான ருத்திரர்களை குறிக்கிறது சம்ஸ்கிருதம் இதைப்பற்றி,

*ரிக் வேதத்தில் மர்தான் மாருத் ருத்திரர்களை பற்றிய குறிப்புகள்*

மர்தான் என்னும் மருத்பாலர்கள் என்பவர்கள் ருத்திரர்கள்(அழிப்பவர்கள்) தோற்றம் பற்றி ரிக் வேதத்தில் கூறப்படும் நம்பிக்கைகள். இவர்கள் வன்மையான தோற்றமும் என்நேரமும் போரின் மீது வேட்கை கொண்டவர்கள்.இவர்கள் சத்தியத்தின் காவலர்களாகவும் தர்மத்தின் மரு உருவமாக சாகசத்தில் பிரியம் கொண்டவர்கள். இவர்களின் தோற்றத்தில் அஞ்சதக்கவர்களாக கொடூரமான இயல்பை உடையவர்கள்.

அவர்கள் தங்க ஆயுதங்கள் மின்னல் மற்றும் இடிபோன்றது.அதாவது இரும்பு பற்கள் கொண்ட சிவந்த குதிரைகள் பூட்டிய தங்க தேர்களில் சவாரி செய்பவர்கள் சிங்க கர்ஜனை போன்று ஆயுதங்களை பிரயோகம் செய்பவர்கள் . ரிக் வேதத்தில் (ஆறாம் பாசுரம் 66) மலைகளை புரட்டியும் காடுகளை கதிகலங்க செய்பவர்கள் என கூறுகிறது.

இவர்களை புராணங்கள் காஸ்யப முனிவருக்கும் திதிக்கும் பிறந்தவர்கள் என விவரிக்கிறது.

இவர்களை ருத்திரர்கள் என கூறுகிறது வேதம். இவர்கள் மிக பராக்கிரம் பொருந்தியவர்களாக கூறுகின்றது வேதம்.

நாம் மேலே சுட்டிய யாவையும் ரிக் வேதத்தில் மறவர்களை பற்றி கூறியவை. மர்தான் என்பதற்க்கும் மறவன் என்பதற்க்கும் ஒரே அர்த்தம் மரணத்தை உண்டாக்குபவன் என பொருள்.

*தேவர்* *என்பது பட்டமல்ல காரணப் பெயர் தான்*

எனவே "தேவன்" என்றால் கொடூரமான அழிவை உண்டாக்கும் ருத்திரர்கள் என்பதன் பொருளுடைய சொல் தான் "தேவர்" என வழங்குகிறது. மருத்பாலர்களான் மர்தாண்களை அமரர்கள்(தேவர்கள்) என வழங்குகிறது வேதம்.

சிவபெருமாணை பெரியபுராணத்தில்,
"அறவனே பன்றியின் பின் ஏகிய மறவனே"
என அர்ச்சுனனிடம் பன்றியை வீழ்த்திய சிவனை கூறுகிறார் சேக்கிழார் இதற்க்கு பன்றிய வீழ்த்தியவன் என பொருள்

ஒட்டக்கூத்தர் பாடிய விக்கிரமசோழனுலாவில்" மனுநீதி சோழனை
கன்றுக்காக மகனை தேரிலூர்த்திய மறவனே என கூறுகிறார் இதற்க்கு மகனை கொன்றவன் என பொருள் படுகின்றது.

எனவே மறவன் எனும் தமிழ் சொல் சம்ஸ்கிருதத்தில் மர்தான் எனவும் மருத்பாலன் என கூறுகிறது.

*மருத்பலன் மர்த்திக வீரன்* பாண்டியன் மன்னன்

பராந்தக நெடுஞ்சடையன் (768-815) 1. வேள்விக்குடிச் செப்பேட்டுப் பகுதி

மருத்பலன் மான்யசாசனன் மனூபமன் மர்த்தித வீரன்
100 கிரிஸ்திரன் கீதிகிந்நரன் கிருபாலயன் கிருதாபதானன்
கலிப்பகை கண்டகநிஷ்டூரன் காரியதட்சிணன் கார்முகபார்த்தன்
பராந்தகன் பண்டிதவத்சலன் பரிபூர்ணன் பாபபீரு
குரையுறு கடற்படைத்தானைக் குணக்கிறுகியன் கூடணிற்ணயன்
நிறையுறு மலர் மணிநீண்முடி நேறியர்கோ னெடுஞ்சடையன் 105 மற்றவன்றன் ராஜ்யவத்சரம் மூன்றாவது செலாநிற்ப ஆங்கொரு நாண்மாட மாமதில்.....

பாண்டியனை மர்த்திக வீரன்(கொலை மறவன்) மருத்பலன்(ருத்திரன்) என செஞ்சடையன் சிவமைந்தன் என புகழ்கின்றது வேள்விக்குடி செப்பேடு.

தேவர் என்பது தமிழகத்தில் நம்மை மட்டுமே குறிக்கும்.  பல சாதியினரும் இதை தமக்கும் உண்டு. என்று சொன்னாலும். அவர்கள் அவ்விதம் வழங்கப்படுவதில்லை. மிகமிக பழமையான சான்றுகள் அன்றிலிருந்து இன்றுவரை நமக்கு மட்டுமே உள்ளன. எடுத்துக்காட்டாக ஆறாம் நூற்றாண்டிலேயே பாண்டியரின் செப்பேடுகளில் "கம்பலைத்தேவன்" எனும் மறவனைப்பற்றிய குறிப்புகள் உள்ளன
தெவ்வர் - தெய்வர்- தேவர் என இப்பெயரின் வேர்ச்சொல் மாறிவழங்கிவருகிறது.  தேவர் என்றால் மனிதருள் கடவுள் என்பதும்,  தலைவன்-அரசன் -உயர்ந்தவன்- மேலானவன் - வானுலகத்தேவர் போன்றவன் என்பதுவும் பொருளாகும்.
என மர்த்தானாகிய் சிவபெருமான் மற்றும் பார்வதி(மர்த்தினி) வம்சத்தில் உதித்த மறவனுக்கு "தேவன்" என்பது பட்டமல்ல பிறப்பு.




 *பாண்டிய வம்சத்தின் ஐந்து நிலை நாட்டார் மறவர்கள்குலம் ஒருங்கினைப்புகுழு*

Monday, 18 September 2017

கவியரசு கண்ணதாசன் அவா்கள் பசும்பொன் தேவா் அவா்களைப் பற்றி எழுதிய ஒரு கவிதை!


"நீதியில் மறவன்; நல்ல
நோ்மையில் மறவன்;  நாட்டில்
ஆதிநாள் தொட்டே போாில்
அருஞ்செயல் புாிந்த செம்மல்;
சாதியில் மறவன்; எங்கள்
தமிழ்முத்து ராமலிங்கம்!
வாதிடும் திறமைக் கெல்லாம்
வரலாற்றில் ஒருவன் அன்னான்!

நல்லறம் வளா்த்துக் காத்த
நைச்டிக பிரம்மச் சாாி!
இல்லறம் இல்லை; ஆனால்
ஏற்காத அறமே இல்லை!
கல்லையும் பணியச் செய்யும்
கனிவுறும் அறத்தில் மிக்க
வல்லவன் பசும்பொன் நாதன்
வளா்புகழ் வளா்க மாதோ!"

பதிவு: சகோதரர் மருதுபாண்டியன் இரா.

Wednesday, 30 August 2017

மறவர் சாதி வரலாறு


தமிழ்ச் சமூகத்தில் மறவர் சாதி

சொல்கதைகளின்படி ராமநாதபுரம் பகுதியில் வாழ்ந்த மறவர்கள், பகவான் ‚ராமர் இலங்கையின் மீது படையெடுத்து வந்தபோது அவருக்குப் பேருதவிகள் செய்தனர். அதன் காரணமாக அவர்கள் 'தேவர்கள்' என்ற சிறப்புப் பெயர் பெற்றனர். எத்தனையோ காலமாக 'சேதுசமுத்திரம்' எனப்படும் (ராமேஸ்வரம் பகுதி) கடல்வழிப் பாதையின் பாதுகாவலராக ராமநாதபுரம் மன்னரே இருந்து வந்தார். அதன் காரணமாகவே 'சேதுபதி' மன்னர் என்ற பெயரும் பெற்றார்.

மேற்கண்ட இரு தகவல்களும் நமக்குச் சொல்வது என்னவெனில் ராமநாதபுரம் பகுதியே ஆதியில் மறவர்கள் குடியிருந்த பகுதி. அங்கிருந்து புலம் பெயர்ந்தே இவர்கள் அருகிலிருந்த திருநெல்வேலிச்சீமை போன்ற பிற பகுதிகளுக்குச் சென்றிருக்க வேண்டும் என்பதே. மறவர்கள் எந்தப் பிரதேசத்தில் வாழ்ந்தாலும் தங்கள் தலைவர் எனும் மரியாதையை மன்னர் சேதுபதிக்கே அளித்து வந்தனர் என்பதை 'மறப்பாட்டு' சொல்கிறது. சண்டையிடும் இனமாக மறவர் பற்றிய முதல் குறிப்புகளைக் 'குல வம்சம்' தருகிறது. பன்னிரண்டாம் நூற்றாண்டின் பாண்டியர்களோடு மரபு உரிமை பற்றிய தகராறில் கொண்டையம்கோட்டை மறவர்கள் பங்கேற்றது பற்றியும் 'குலவம்சம்' பேசுகிறது. சேதுபதி மன்னரின் தலைமையின் கீழ் இருந்த மறவர்கள், மதுரை பாண்டிய மன்னனைச் சார்ந்தே இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இராமநாதபுரம் மாவட்டம் பதினெட்டாம் நூற்றாண்டில் மறவர்சீமை என அறியப்பட்டிருந்தது. வடக்கே வெள்ளாற்றின் கரையிலிருந்த அறந்தாங்கியிலிருந்து தெற்கே சாயல்குடி வரையிலுமான கிழக்குக் கடற்கரைப் பகுதி முழுமையும் மறவர் சீமையாகும். மேற்கே அது மதுரை வரை நாயக்கரின் ராட்சியம் நீண்டிருந்தது. தஞ்சை மராட்டிய அரசும், புதுக்கோட்டை கள்ளர் பிரதேசமும் வடக்கே சூழ்ந்திருக்க, மேற்கிலும் தெற்கிலும் மதுரை நாயக்கர் அரசு பரவியிருக்க கிழக்கே ஆங்காங்கு போர்ச்சுகீசிய மற்றும் டச்சுக் குடியேற்றங்கள் தென்பட்டன.

நெல்லைச் சீமையில் களக்காடு முதல் மேற்குத்தொடர்ச்சி மலையின் அடியைத் தொட்டு நின்ற இராஜபாளையம் வரை மறவர்கள் பரவியிருந்தார்கள். பெரும்பாலான மறவர் பாளையங்கள் இப் பகுதியிலேயே உருவாக்கப்பட்டன. அவை சிங்கம்பட்டி, ஊர்க்காடு, ஊத்துமலை, வடக்கரை, சுரண்டை, நடுவக்குறிச்சி, குருக்கள்பட்டி, அழகாபுரி, நெற்கட்டும் செவல், தலைவன்கோட்டை, தென்மலை (சிவகிரி) கொல்லம் கொண்டான் மற்றும் சேத்தூர் ஆகும். களக்காட்டுக்கு அருகே திருக்குறுங்குடியிலும், வள்ளியூர்,பணக்குடியிலும் கூட மறவர் குடியிருப்புகள் இருந்தன. இச் சீமையின் கிழக்கே மாநாடு, பூச்சிக்காடு, ஆறுபங்குநாடு போன்ற பகுதிகளிலும் மறவர் குடியிருப்புகள் இருந்தன. மத்தியப் பகுதியில் இருந்த மூன்று மறவர் பாளையங்கள் கடம்பூர், மணியாச்சி மற்றும் ஏழாயிரம் பண்ணை ஆகும்.

1922 இல் நவநீதக் கிரு‰ண மருதப்பத்தேவர் திருநெல்வேலி சிவில் நீதிமன்றத்தில் சம்ர்ப்பித்த ஓலைச்சுவடிகளின்படி இராமநாதபும் பகுதியிலிருந்த ஊத்துமலைக்குப் பதினோராம் நூற்றாண்டில் புலம் பெயர்ந்ததாக அறிகிறோம். பதிப்பிக்கப்படாத ஓலைச்சுவடியில் உள்ள 'வடக்கரை ஆதிக்கம்' வரலாற்றின்படி ராமநாதபுரத்திலிருந்து வடக்கரைக்கு மறவர்கள் குடிபெயர்ந்தது பன்னிரண்டாம் நூற்றாண்டில் எனலாம். சிங்கம்பட்டி, ஊர்க்காடு மற்றும் சேத்தூர் மறவர்கள் பதினோராம் நூற்றாண்டுக்கு முன்பாகவும் களக்காடு மறவர்கள் திருக்குறுங்குடிக்குப் போனது பதினைந்தாம் நுற்றாண்டின் மத்தியில்தான் எனவும் அறிகிறோம்.

மறவர், கள்ளர், அகமுடையார்களுக்கிடையே நெருங்கிய உறவு இருக்கிறது.
'கள்ளர் மறவர்
கனத்ததோர் அகமுடையார்
மெல்ல மெல்லவே
வெள்ளாளரானார்'

எனும் பழமொழி வழக்கிலுள்ளதை அறிவோம். அடிப்படையில் தங்கள் தலைவர்களுக்கு ராணுவ சேவை அல்லது காவல் கடமைகள் ஆற்றி வந்த இனமாகவே மறவர்கள் இருந்தனர். இதே நிலைமைதான் கள்ளர்களுடையதும். கள்ளர்கள் முதலில் தஞ்சைப் பகுதியில் இருந்து வந்துள்ளனர். பின்னர் பதினோராம் நூற்றாண்டில்தான் பாண்டிய அரசுப் பகுதிக்கு வந்து குடியேறினர். அகமுடையார்கள் ஆதியில் விவசாயம் பார்க்கிறவர்களாகக் காஞ்சிபுரம் பகுதியில் வாழ்ந்து வந்தனர்.

இந்த மூன்று பிரிவினருக்குள்ளேயும் ஏராளமான உட் பிரிவுகள் உண்டு. இந்த உட் பிரிவுகளுக்குள்ளே சண்டை சச்சரவுகளே நடக்கவில்லை என்று உறுதியாக யாரும் கூற முடியாது. வெவ்வேறு உட் பிரிவுகளுக்கிடையேயும் தனி நபர்களுக்கிடையேயும் குழுப் பகைமைகளும், சண்டைகளும் இருந்தன. மறவர்களிடைய கொண்டையங்கோட்டைப் பிரிவினர் தங்கள் மேலாதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்டனர். எண்ணிக்கையில் அதிகமான பேர் இருந்ததோடு மறவர் சாதிகளிலேயே அதிக தைரியமும் ஆக்ரோ„மும் உடையவர்களாக கொண்டையங்கோட்டையார் இருந்தது இதற்கு காரணமாக இருக்கலாம். பெரும்பாலான மறவர் பாளையங்களை இவர்களே ஆதிக்கம் செய்யமுடிந்ததற்கு இது காரணமாக இருந்திருக்கலாம். முத்துராமலிங்கத்தேவர் குடும்ப ஆவணங்களிலிருந்து ராமநாதபுரம் சீமையில் இக் கொண்டையங்கோட்டைத் தளபதிகள் பல சிறப்புச் சலுகைகளை அனுபவித்து வந்ததை அறிய முடிகிறது .

மறவர்கள் குழக்களாக வாழ்ந்தனர். மறவர் கிராமங்கள் கோட்டைச் சுவர்களுடன் இருந்தன. கிராமத்தலைவர்கள் கிராமத்தைப் பாதுகாக்க வலுவான ஒரு படை வைத்திருந்தனர். கிராமத் தலைவர்கள் முழு சுயாட்சி அதிகாரம் பெற்றவராக இருந்தாலும் தேவைப்படும் சமயங்களில் மன்னருக்கு ராணுவச்சேவை செய்தனர். பாண்டிய மன்னர்களின் பலமே இம் மறவர் தலைவர்கள் அளித்த ஆதரவில்தான் அடங்கியிருந்தது. கிறிஸ்தவ ஆதாரங்களும் 'குலவம்சம்' கூறியவற்றை உறுதிப்படுத்துகின்றன.

மதுரை பாண்டிய மன்னர்களின் வீழ்ச்சிக்குப் பிறகும் சேதுபதிகளின் முந்தைய மேலாதிக்கம் தொடர்ந்தது. மதுரை நாயக்க மன்னர் முத்துகிருஷ்ணப்ப நாயக்கரும் கூட, முந்தைய பாண்டிய அரசின் அரசுரிமை பெற்ற மறவர் சீமையின் வாரிசுதாரர்களாக அவர்களை ஏற்றுக்கொண்டு உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சேதுபதிகளின் ஆட்சியின் கீழ் மறவர் கிராமங்கள் முழுமையும் மறவர் தலைவர்களுக்கே சொந்தமாக இருந்தன. சேதுபதி மன்னர் கேட்கும்போதெல்லாம் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ராணுவ வீரர்களை அக் கிராமங்கள் அனுப்பி வைக்க வேண்டும் என்கிற ஒரே ஒரு நிபந்தனை மட்டும் இருந்தது.

ஒவ்வொரு மறவரும் போர் வீரராகவே இருந்தனர். அவர்களில் ஒரு சிலர் மட்டுமே நிலங்களில் பாடுபட்டனர். இந்த வீரர்கள் தங்கள் கிராமத்தில் காவலர்களாக இருந்தனர். தலைவர்களின் போர்க்காலங்களில் பங்கேற்றும் கோட்டைகளைக் காத்தும் தங்கள் தலைவருக்கு ஆதரவாகப் போரில் உதவினர்.

மறவர்கள் முதலாவதாகத் தங்களின் கிராமத் தலைவருக்கே கட்டுப்பட்டவராக இருந்தனர். அவரே அவர்களைப் பாதுகாப்பவராகவும் ஆள்பவராகவும் இருந்தார். அச் சமூக முழுமையின் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவராக சேதுபதி, மறவர்களின் அன்பையும் மரியாதையையும் பெற்றிருந்தார்.எனவேதான் மிகக் குறுகிய கால அவகாசத்தில் கூட முப்பதாயிரம், நாற்பதாயிரம் படை வீரர்களைச் சேதுபதியால் திரட்ட முடிந்தது.

இம் மறவர்களின் இனக்குழு வாழ்க்கை முறையும், வீர மிக்க நடவடிக்கைகளும், தங்கள் இனத்துக்கும் தலைமைக்கும் கட்டுப்பட்டவராக உண்மையாக இருந்த தன்மையும், இவர்களைப் பதினெட்டாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் வல்லமை மிக்கதொரு அரசியல் சக்தியாக உருவாக்கி இருந்தது.

நெல்லைச் சீமையில் மறவர் பாளையக்காரர்கள் அல்லது காவல் தலைவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இம் மறவர்கள் காவல்காரர்களாகப் பணியமர்த்தப்பட்டனர். காவல் என்பது கண்காணிப்புப் பணியைக் குறிக்கும். அது ஒரு ஸ்தாபனமாக ஓரளவு இன்றைய போலீஸ் ஏற்பாட்டை ஒத்திருந்தது.

ஸ்தலக்காவல் மற்றும் தேசக் காவல் என காவல் இரு வகைப்பட்டது. ஸ்தலக் காவலில் காவல் தலைவர் கிராமத்தைப் பகுதிகளாகப் பிரித்துக் காவல்காரர்களின் குடும்பங்களுக்குப் பங்கீடு செய்வார். காவல் பகுதிகள் தலைவரின் விருப்பப்படி மாற்றவும் படலாம்.

காவல் தலைமை என்பது பரம்பரை உரிமையாக இருந்தது. கிராமக்கோயில் காவல் தலைமையின் ஆளுகையில் இருந்தது.

காவல்காரர்களின் தலையாய கடமை கிராம மக்களின் சொத்துக்களான பயிர்கள், தானியங்கள், கால்நடைகள் மற்றும் பிற குடும்ப சொத்துக்களைப் பாதுகாப்பதும், பொது இடங்களான கோயில்கள், சாலைகள் மற்றும் சந்தைகளைப் பாதுகாப்பதும் ஆகும். ஏதாவது திருட்டு நடந்துவிட்டால் சம்பந்தப்பட்ட காவல்காரரே களவு போன பொருளுக்குப் பொறுப்பேற்க வேண்டும். பொருளை மீட்டுத் தரத் தவறினால் அவரே ந‰ட ஈடும் தர வேண்டும். இதனை அமல்படுத்துவதே காவல் தலைமையின் கடமை. எனவே, காவல் தலைவர் தான் மக்களுக்கு நேரடியாகப் பொறுப்பானவர். காவல்காரர்கள் அல்லர். காவல்காரர்களுக்கும் மக்களுக்கும் இடையே உறவுப்பாலமாகக் காவல் தலைவர் இருப்பார். காவல் தலைவர் திருட்டுப் பொருளுக்கான நஷ்டஈட்டை உடனடியாகக் காவல்காரரிடம் வசூலிப்பதில்லை. தன் உதவியாளர்களுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு திருடனைக் கண்டுபிடித்து நஷ்ட ஈட்டை அவனிடமே வசூலிப்பார். அது சாத்தியமாகாது போனால் மட்டுமே, காவல்காரரை இழப்புத் தொகையை வழங்கச் சொல்வார். இவ்விதமாக கிராமக்காவல் தலைவர் போலீஸ் மற்றும் நீதி பரிபாலன அதிகாரத்தை எடுத்துக் கொள்வார். அவரும் அவரது உதவியாளர்களும் குற்றங்களைக் கண்டுபிடிக்க மிகக் கொடூரமான முறைகளைக் கையாண்டனர்.

காவல்காரர்களின் சேவைகளுக்கு ஈடாக 'ஸ்தலக்காவல்' என்ற பெயரில் ஒரு கட்டணம் வழங்கப்பட்டது. அது அவர்கள் பாதுகாத்து வந்த தானியங்களின் (விளைச்சலில்) ஒரு பகுதியாகவோ அல்லது அதற்கு ஈடான பணமாகவோ இருக்கும். காவல்காரர்கள் தங்கள் வசூலில் ஒருபகுதியைக் காவல் தலைவருக்கு வழங்கினர்

கோயில் காவலுக்கான வருமானம் காவல்தலைவருக்கு வரும். அவர் அதில் ஒரு பகுதியைத் தன் கீழ்ப்பட்டவர்களுக்குப் பகிர்ந்தளிப்பார். பெரும்பாலும் கோயில்கள் காவல் தலைவருக்கு நிலங்களை வழங்கின. அதைக் கொண்டு அவர்கள் தங்களையும் தங்கள் பரிவாரங்களையும் காத்து வளர்த்துக் கொண்டனர். காலப்போக்கில் மைய அரசுகள் வலு இழந்தபோது இக் காவல் தலைவர்கள் தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தித் தாங்களே கிராமத்தின் ஆட்சியாளர்களாக மாறினர். ஏற்கனவே காவல் மற்றும் நீதி பரிபாலன அதிகாரத்தை இவர்கள் தங்கள் கையில் வைத்திருந்தது இதற்கு உதவியாக இருந்தது.

தேசக்காவல் :
தேசக்காவல் அமைப்பில் பல கிராமங்கள், ஒருதலைவரின் ஆளுகையின் கீழ் இருக்கும். இக் கிராமங்களின் தலைவராகக் காவல் தலைவராக அவர் இருப்பார். இதுவும் மறவர்களுக்கானத் தனிவகையான அமைப்பாகும். இதன் மற்ற முறைகளெல்லாம் ஸ்தல காவலையே ஒத்திருந்தன. கிராமங்களில் காவல் பணிபுரிந்த தலைவர்கள் தேசக்காவல் தலைவருக்குக் கட்டுப்பட்டு இருந்தனர். கிராமங்களுக்கிடையே ஏற்படும் பிணக்குகளைத் தேசக்காவல் தலைவர்கள் தீர்த்து வைத்தனர். இந்தத் தீர்ப்பு மறு பேச்சில்லால் ஒப்புக் கொள்ளப்பட்டது. இதற்கு 'தேசக்காவல்' என்ற பெயரில் ஒரு கட்டணம் வசூலிக்கப்பட்டது.

தங்கள் பகுதிகளில் மறவர் பாளையக்காரர்களும் தேசக்காவல் தலைவர்களாக இருந்துள்ளனர். இதனை மறவர் தலைவர்களுக்கும், நாயக்கப் பாளையக்காரர்களுக்கும் இடையே எழுந்த பல 'காவல் சச்சரவு'களில் இருந்து அறிய முடிகிறது

1776 இல் நாங்குநேரி மறவர்களுக்கும், நாயக்கப் பாளையக்காரரான பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மனுக்கும் இடையே நடைபெற்ற போர் குறிப்பிடத்தக்கது. நாங்குநேரி மற்றும் களக்காடு மறவர்கள் முன்னூறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தாங்கள் தேசக்காவல் உரிமையைப் பெற்றிருந்தமையால் நாயக்கர்கள் அதில் தலையிடக் கூடாது என்றனர். இதன் மூலம் நாயக்கர்களுக்கு முன்பே மறவர்கள் தேசக்காவல் தலைமை ஏற்றிருந்தனர் என்பது உறுதியாகிறது. தேசக்காவல் முறை 1780 முதல் 1781 வரையிலான காலத்தில் மிக உச்சத்தில் இருந்தது. காவல், நீதி மற்றும் நிர்வாக அதிகாரங்களைத் தேசக்காவல் தலைவர் செலுத்தி வந்தார். இத் தலைவர்கள் தங்களுடன் எப்போதும் சிஷ்யர்களை வைத்திருந்தனர். இவர்கள் அநேகமாகப் பள்ளர் இன மக்களாக இருந்தனர்.

காவல் அமைப்பு மறவர்கள் ஒரு தலைவரின் கீழ் ஒன்றுபட்டு நிற்கவும் அத் தலைவரை வலுவானவராக நிறுத்தவும் வாய்ப்பாக அமைந்திருந்தது. மைய நிர்வாகம் சீர்குலைந்தபோது ஊர்களின் பாதுகாப்பு அவர்கள் கையில் இருந்தது.

மதுரை விஜயநகர அரசர்களின் கீழ் வந்தபோது ராமநாதபுரம் மதுரைப் பேரரசின் கீழ் வந்தது. ஆனால் அரசியல் சூழல்கள் மதுரை அரசர் முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கரை 1605 ஆம் ஆண்டின் பண்டைய சேதுபதி எல்லை வரை மறவர் ஆளுகையை ஏற்றுக் கொள்ளவும் தொடர்ந்து செயல்படுத்தவும் நிர்பந்தித்தன என்ற போதிலும், மறவர் அரசு மதுரை அரசின் விருப்பத்திற்கிணங்கவே செயல்பட்டது. தங்களின் ராணுவ வல்லமையின் காரணமாக அதன் ஆதிக்கத்தின் கீழ்தான் இருக்க வேண்டியிருந்தது. ஆனால், ராமநாதபுர மறவர்கள் தங்கள் நிலையை உறுதிப்படுத்திக் கொண்டனர். நாயக்கர் ஆட்சி நீடித்து நிலைப்பது என்பதே மறவர்களின் ஆதரவில் என்பதால் நாயக்க அரசர்கள் குறிப்பிடத்தக்க செயல்பாட்டுச் சுதந்திரத்தை மறவர்களுக்கு அளித்திருந்தனர்.

வேறு பல களங்களில் நாயக்க மன்னர்கள் செலுத்திய ஈடுபாடானது சேதுபதிக்கு, நாயக்க அரசர்களுக்கு எதிரான மனநிலை வளரக் காரணமாக அமைந்தது. மதுரை அரசருடனான சேதுபதியின் தொடர்புகள் வெறும் சம்பிரதாயப் பூர்வமாகவே இருந்தன. நடைமுறையில் அவர் சுயாட்சியாளராகவே இருந்தார். சேதுபதி மன்னர் மதுரை அரசுக்கு ஆண்டுக் கப்பத்தைச் செலுத்திய ஒரே நடைமுறை தவிர வேறு தொடர்புகள் இல்லை. அதையும் அவர் ஒழுங்காகச் செலுத்த அக்கறை காட்டியதில்லை. கிழக்குக் கடற்கரையின் மூலமாக வெளிநாட்டு அரசர்களுடன் சேதுபதி மன்னர் நேரடித் தொடர்புகள் வைத்திருந்தார். இது போன்ற நடைமுறைகளுக்கு அவர் மதுரை அரசின் ஒப்புதலைப் பெற்றதில்லை .

சேதுபதியின் வளர்ச்சி தனது அரசுக்கு ஆபத்தாக மாறக் கூடுமென கருதிய நாயக்க அரசர், சேதுபதியை ஒடுக்கும் பொருட்டு போர்ச்சுகீசியருடன் 1639 ஆகஸ்டு 13 அன்று ஒரு உடன்படிக்கை செய்து கொண்டார். நாயக்க அரசரின் இம் முயற்சியை சேதுபதி டச்சுக்காரர்களுடனான ஒப்பந்தத்தின் மூலம் முறியடித்தார். அதன் பின் மறவர்களின் மீதான நாயக்க அரசின் ஆதிக்கம் மங்கத் தொடங்கியது. ராமநாதபுர ராஜாக்களுடனான டச்சுத்தொடர்புகள் மதுரை நாயக்கர்களுக்கு எதிரான வளர்ச்சியைக் குறிக்கின்றன.

ஒரு டச்சு ஆதாரக்கூற்றின்படி 'கட்டத்தேவர்' எனும் இந்த இளவரசர் மதுரை நாயக்கரின் பிரஜயும் உப பகுதியும் ஆவார். ஆனால் இவ் அரசருடனான எங்களின் நட்புப்பூர்வமான உடன்பாட்டுக்குப் பிறகு, மதுரை நாயக்கர்களுக்கு அவர் முன்பு அளித்த மரியாதையை அளிக்கவில்லை'.

ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்ட ஒரு கடிதம் மேற்கண்ட டச்சு ஆதராத்தினை உறுதி செய்து மறவர்களின் விரிந்த இராணுவ பலத்தினை விவரிக்கிறது. அக் கடிதத்தில் பாதர் மார்ட்டின் எழுதுகிறார்

'மறவர் சீமை எனும் இப் பேரரசு மதுரைக்குக் கட்டுப்பட்ட உப பகுதியாகும். ஆனால் இது பெயரளவுக்குத்தான். எப்போதேனும் மதுரை அரசு பலப் பிரயோகத்தின் மூலம் இவரிடமிருந்து கப்பம் வசூலிக்க முயன்றால், மதுரைப்படைகளை முறியடிக்கும் வல்லமை மறவர் பட்டாளத்துக்கு இருந்தது. பல சிற்றரசுகளைத் தன் கீழ்க் கொண்டிருந்த இவ் அரசு முழு வீச்சுள்ள அதிகாரத்துடன் இயங்கியது''.

ஏப்ரல் 1771 இல் ƒாசியŠ டு ப்ரி, வாரன் ஹோஸ்டிங் , சாமுவேல் ஆர்ட்லி ஆகியோரைக் கொண்டு சென்னை ஆளுநரால் அமைக்கப்பட்ட குழு தன் அறிக்கையில், 'திருமலை நாயக்கர் விலக்களித்த பின்பு மதுரை அரசர்கள் இராமநாதபுரம் மறவர்களிடமிருந்து கப்பம் வசூலித்ததற்கான எந்த ஆதாராமும் இல்லை. திருமலை நாயக்கரின் வாரிசுகள் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சித்திருந்தாலும் அது நடைமுறை சாத்தியமாயிருக்காது. நாயக்க மன்னர்களில் வீரம் செறிந்தவரான திருமலை நாயக்கரே கப்பம் கட்ட வலியுறுத்த இயலாத அளவிற்கு மறவர்கள் வலுவான சக்தியாகத் திகழ்ந்தனர். ராமநாதபுரத்தில் பலவீனமான ஆட்சியாளர் இருந்தபோதோ, அல்லது ராமநாதபுரம் அரசு உள்நாட்டு விவகாரங்களில் சிரமப்படும்போதோ மட்டுமே மதுரை அரசின் மேலாதிக்கத்தை அமுல்படுத்துவது சாத்தியமாக இருந்தது'' என்று கூறுகிறது.

இந்த நட்பற்ற உறவு மதுரைக்குப் படைபல உதவிகள் செய்யும் கடமையைச் சேதுபதி நிறைவேற்றத் தடையாக இருக்கவில்லை.

1656 இல் மைசூர் அரசர்கள் மதுரை நாயக்க அரசின் மீதான படையெடுப்புச் செய்தபோது திருமலை நாயக்கர், ரகுநாத சேதுபதியின் உதவியை நாடினார். அவரும் மதுரை அரசின் எல்லையிலிருந்து மைசூர்ப் படைகளை விரட்ட உதவினார்.

மதுரை ஆளுகையிலிருந்து விடுபட்டு சேதுபதி தன்னிச்சையாய் செயல்படும் சூழல் ஏற்பட்டதும் அவர் தனது சொந்த உளவுத்துறை வலைப்பின்னலை, நாயக்க ராட்சியம் முழுவதிலும் பற்றிப் படர்ந்திருந்த மறவர்களின் உளவு வலைப்பின்னல் குறித்து இராமநாதபுரம் அரண்மனை ஆவணங்கள் பேசுகின்றன. சேதுபதிகள் நீதிபரிபாலனத்தில் நாயக்க மன்னர்களின் சட்ட திட்டங்களைப் பின்பற்றாமல் தங்களது சொந்தக் கோட்பாடுகளைக் கடைப்பிடித்தனர். ராமநாதபுர அரசர்கள் முதுகுளத்தூர், சாயல்குடி போன்ற பல துணை மையங்களைத் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் உருவாக்கினர்.

'மறவர் சீமையின் வளர்ந்து வரும் ராணுவ வல்லமை யதார்த்த நிலைமையை ஏற்றுக்கொள்ளும்படி நாயக்கர்களை நிர்ப்பந்தித்தது. விŠவநாதர் என்ற நாயக்க அரசின் அமைச்சர் இந்த நிலைமையைச் சமாளிக்க ஒரு சமரசத் திட்டத்தை முன் வைத்தார். அதன்படி மறவர் தலைவர்கள் 'பாளையக்காரர்கள்' என்ற புதிய பெயரில் தங்கள் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டனர்' என்பது சத்திய நாதய்யரின் கூற்று.

மறவர் தலைவர்கள் பாளையக்காரர்கள் எனும் புதிய ஏற்பாட்டில் மேலும் வல்லமையே பெற்றனர். ஆயுதம் தாங்கிய படையையும், துறைமுகங்களையும் தொடர்ந்து பராமரித்தனர். நடைமுறையில் அவர்கள் சுயாட்சி பெற்றவர்களாகவும், மைய நிர்வாகத்தின் எத்தகைய நேரடிக் கட்டுப்பாடுகளும் அற்றவர்களாகவும் இருந்தனர். மேலும் மறவர் தலைவர்களே மத்திய அரசுக்கான இராணுவத்தை அனுப்புகிறவர்களாக இருந்தனர். இதன் மூலம் மைய அரசின் திடம் என்பது பாளையக்காரர்களின் விசுவாசத்தையும் ஒத்துழைப்பையும் சார்ந்து இருந்தது. நெருக்கடிகளைச் சந்திக்க ஒரு நிரந்தரமான ராணுவ ஏற்பாடு மதுரை நாயக்கர்களிடம் இருக்கவில்லை. இந்நிலையைச் சமாளித்து சமநிலையில் வைக்கவே சில நாயக்கப் பாளையங்கள் நாயக்க மன்னர்களால் ஏற்படுத்தப்பட்டன என்று தோன்றுகிறது. மறவர்களும் நாயக்கர்களும் ஒன்றுபட வாய்ப்பு இல்லாதிருந்ததால் மைய அரசை எதிர்த்த பாளையக்காரர்களின் கூட்டுக்கலகம் குறித்த ஆபத்து எதுவும்இல்லை. அப்படி ஏதேனும் ஒரு பிரிவு பாளையக்காரர்களின் கலகம் ஏற்பட்டால் மற்றொரு பிரிவின் உதவியோடு அதனை அடக்கிடவும் முடியும்.

பாரம்பரியமாக மறவர்கள் ஒரு வரையறைக்குட்பட்ட தன்னாட்சியும் தங்களின் எல்லைகளுக்குள் முழு சுதந்திரமும் பெற்றே செயல்பட்டனர். அத்தகைய சுதந்திரம் நாயக்கப் பாளையக்காரர்களுக்கும் இப்போது வழங்கப்பட்டது. தங்களுக்கு சமமாக நாயக்கப் பாளையக்காரர்கள் நடத்தப்படுவதை மறவர்களால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அவர்களைக் கடுமையாக வெறுக்கத் துவங்கினர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் பொருளாதார மேம்பாடு அடைந்த நாடார்களுடனும் அவர்கள் இத்தகைய எதிர்ப்பு அணுகுமுறையைக் கையாண்டனர் என்பதையே மதுரை, சிவகாசி, கமுதி, கழுகுமலைத் தொடர் கலவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. தற்போதைய சூழலில் மறவர்களின் அடக்குமுறைக்கெதிராய்ப் போராடும் தலித்துகளிடமும் இதேவித அணுகுமுறையே தொடர்கிறது.

மறவர்கள் ஒரு சாதியாகவும், நாயக்கர்கள் மற்றொரு சாதிக் குழுவாகவும் இருந்ததால் ஏற்பட்ட கசப்புணர்வு பெருகி வெளிப்படையான முரண்பாடுகளும், மோதல்களும் வளர்ந்தன. கடம்பூர், மணியாச்சி, ஏழாயிரம் பண்ணை நீங்கலாகப் பிற மறவர் பாளையங்கள் எல்லாமே மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் ஒருங்கிணைந்த பிராந்தியமாக அமைந்திருந்தன. எனவே, பின்னர் அவை மேற்குப்பகுதி (மேகாடு)என அழைக்கப்பட்டன. எட்டயபுரம், பாஞ்சாலங்குறிச்சி, மேல்மாந்தை, குளத்தூர் மற்றும் காடல்குடி ஆகிய நாயக்கப் பாளையங்கள் எல்லாம் நாட்டின் கிழக்கே அமைந்ததால் கிழக்குப் பகுதி (கீகாடு) என அழைக்கப்பட்டன.

நாயக்கப் பாளையங்களை மறவர்களோ மறவர் பாளையங்களை நாயக்கர்களோ ஆண்டதாக எங்கும் குறிப்பு இல்லை. தனிப்பட்ட பாளையங்களில் இவர்களுக்குள் ஒற்றுமை இருந்ததாகத் தெரிகிறது. கட்டபொம்ம நாயக்கரின் தளபதியாக பகதூர் வெள்ளை என்ற மறவர் சமூகத்தவர் இருந்திருக்கிறார்.

தேசக்காவல் வசூலை நாயக்கப் பாளையக்காரர்கள் கையிலெடுத்தபோது மறவர்களுடன் மோத வேண்டிய நிலை ஏற்பட்டது.

பாஞ்சாலங்குறிச்சிக் கட்டபொம்மனுக்கும், நாங்குநேரி மறவர்களுக்கும் இடையேயான மோதல் இதற்கு ஓர் உதாரணமாகும். அதே நாயக்கப் படைகள்தான் திருக்குறுங்குடி சிவராமத் தலைவரையும் தாக்கின. ஆனால் இதெல்லாம் பதினெட்டாம் நூற்றாண்டில் தான் நடந்தது. மறவர் பாளையக்காரர்களுக்கும், நாயக்கப் பாளையக்காரர்களுக்கும் இடையேயான பகைமை இதற்கும் முன்பிருந்தே நிலவி வந்தது. எட்டயபுரம் நாயக்கப் பாளையக்காரர், மதுரை நாயக்கப் பாளையக்காரர், மதுரை நாயக்க மன்னரை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தபோது திருநெல்வேலி மறவர் தலைவர்கள் இணைந்து எட்டயபுரம் நாயக்கரை ஒடுக்கினர். எங்கேனும் ஒரு மறவர் பாளையக்காரர் அரசுக்குக் கீழ்ப்படிய மறுத்தால், தளவாய் முதலியார் நாயக்க இனத் தலைவர்களின் உதவியைப் பெற்று ஒடுக்கினார்.

இரண்டாம் கர்நாடகப் போருக்குப் பின் 1754 இல் மதுரை திருநெல்வேலி மீதான நவாபின் ஆட்சி உரிமை உறுதிப்படுத்தப்பட்டது. பிரிட்டிஷ்  கிழக்கிந்தியக் கம்பெனியும் தஞ்சாவூர், புதுக்கோட்டை, உள்ளூர் அரசுகளும் இக்கட்டான நேரத்தில் நவாபுக்கு உறுதுணையாய் நின்றன. இருந்தபோதிலும் மறவர்களின் எதிர்ப்பினால் நவாப் தெற்கே தனது அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்ள முடியவில்லை. இந்த எதிர்ப்பைப் புலித்தேவர் பிரதிநிதித்துவப்படுத்தினார். மைசூர் அரசு மற்றும் பிரெஞ்சுக்காரர்களால் உண்டான பிரச்சினைகளைச் சமாளித்த பின்னர் நவாப் தான் பிரிட்டிஷ்  படைகளைச் சார்ந்திருப்பதை உதறி விட நினைத்தார். ஆனால் தெற்கே மறவர்கள் தொடர்ந்து ஒரு அச்சுறுத்தலாக இருந்து வந்ததால் அவரால் அதைச் சாதிக்க முடியவில்லை. மறவர்களைப் பணிய வைக்க வேண்டும் என்பதில் நவாபும் பிரிட்டிஷாரும் உடன்பட்டனர். ஆனால் நவாபுக்கும் பிரிட்டிஷாருக்கும் இடையே இருந்த பரஸ்பர பகைமையால் இத் திட்டம் உடனே நிறைவேறவில்லை. இருந்தபோதிலும் வெளிநாட்டு ஆதிக்கத்தை எதிர்த்து வந்த மறவர்களை ஒழித்துக் கட்டுவதில் நவாப் ஈடுபட்டார்.

புலித்தேவரின் எதிர்ப்பு முயற்சிகள் ஓரளவு வெற்றி பெற்றன. ஆனால் இராமநாதபுரம், சிவகங்கை மறவர்களை அவரால் பிரிட்டிஷாருக்கு எதிராக அணி திரட்ட இயலவில்லை. இரண்டு மறவர் அரசுகளுமே நவாபுக்கும், பிரிட்டிஷாருக்கும் எதிரான அவர்களின் போருக்காகத் திருநெல்வேலி மறவர்களை அணி திரட்டவில்லை. புதுக்கோட்டை கள்ளர் அரசு மறவர்களின் நலனுக்கு எதிராகவே நடந்துகொண்டது. இத்தகைய ஒற்றுமையின்மை நிலவியபோதும் நவாபும் பிரிட்டிஷாரும் காவல்தலைவர்கள் மற்றும் மறவர் பாளையக்காரர்களின் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டித்தான் வந்தது. சிவகிரி பாளையக்காரர் தனது நிதி முழுவதும் தீர்ந்து ஓட்டாண்டியாகும் வரை போர் புரிந்தார்

பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசிக் கால் பகுதி சிவகங்கையில் மருது சகோதரர்களின் எழுச்சியைக் கண்டது. பிரிட்டிஷ் எதிர்ப்புணர்வு கொண்ட போதிலும் அவர்கள் அகமுடையார் பிரிவினராக இருந்தபடியால், மறவர்களின் முழு ஒத்துழைப்பைப் பெற முடியவில்லை. குறிப்பாக இராமநாதபுர சேதுபதி இவர்களின் அதிகார எழுச்சியை விரும்பவில்லை. மறவர், அகமுடையார் முரண்பாடு பிரிட்டிஷாருக்கு மருது சகோதரர்களை எளிதாகச் சமாளிக்கப் பெரிதும் உதவிகரமாய் அமைந்தது. தஞ்சாவூர் மராத்தியர்கள் மற்றும் புதுக்கோட்டை கள்ளர்களின் எதிர்ப்பு நிலைப்பாடு தெற்கே மறவர்களின் அரசியல் ஆதிக்கம் தகர்ந்து போவதை விரைவுபடுத்தியது.

பிரதேசத்தின் ஆதிக்கத்துக்கான பல்முனைப் போட்டியில் பிரிட்டிஷார் வெற்றிகரமாக முன்னேறி 'மெட்ராஸ்  பிரசிடென்சி' யை 1803 இல் உருவாக்கினார். பாளையக்காரர்களின் அனைத்துக் கோட்டைகளும் அழிக்கப்பட்டன. சர்க்கார் பகுதியில் வாழ்ந்தாலும் சரி. பாளையப் பகுதியில் வாழ்ந்தாலும் சரி. எல்லா மறவர்களும் ஆயுதங்களை ஒப்படைக்கும்படி ஆணையிடப்பட்டது (1803). காவல் என்கிற நிறுவன அமைப்பு 1816 இல் அதிகாரப்பூர்வமாகக் கைவிடப்பட்டது. காவல் மற்றும் இராணுவம் தவிர வேறு எதிலும் பயிற்சி பெற்றிராத மறவர்கள் முற்றிலுமாக நிலை குலைந்து போயினர். சிறிய நிலங்களை வைத்திருந்த மறவர்கள் பிரிட்டிஷாரின் நில வருவாய்த் திட்டத்தினால் மிகவும் பாதிப்புக்குள்ளாயினர். ஆனால் மறவர்களின் ஆக்ரோ„ உணர்ச்சி மட்டும் மடியவில்லை. அவன் பிறப்பால் ஒரு போர்வீரனாக இருந்தமையால் சமூகத்தின் சாதுவான பகுதியைத் தனது வலிமையால் ஆளத் தனக்குரிமை உண்டு என எண்ணினான்.

மரபான நடைமுறைகளை ஒரே இரவில் மாற்றி விட முடியாது. மறவர்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பிரிட்டிஷ்  சட்டத்தை மீறி அதற்கு மாறாகத் தங்களது காவல் பணியைத் தொடர்ந்தனர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மதச்சேவைக்குழு ஒன்றின் அறிக்கை திருநெல்வேலி மாவட்டத்தில் நிலவிய சுவாரசியமான நடைமுறை குறித்த தகவல்களைத் தருகிறது.

'நகரத்திலிருந்து விலகி உள்ளடங்கியுள்ள நாட்டுப்புறப் பகுதிகளில் வாழும் மக்கள் முற்றிலுமாக மறவர்களின் பிடியிலேயே வாழ்கின்றனர். ஒவ்வொரு மண் குடிசையில் வாழும் வீட்டு உரிமையாளரும் மறவர்களுக்கு அரைப்பணம் (அதாவது ஒரு அணா எட்டுப் பைசாவை) வருடந்தோறும் தர வேண்டும்

கால்நடை வைத்திருப்போர் ஒரு பணம் தர வேண்டும். அறுவடையின்போது எதிரிநாட்டு வயல்களில் தானியங்களை அறுத்துக்கொண்டு போவது தென் தமிழகத்தின் வழக்கமான நடைமுறையாக இருந்து வந்தது. பிரச்சினையை ஒரு நெருக்கடியை நோக்கி நகர்த்தி முற்ற விட்டு எதிரியைச் சரியான இடத்தில் நிறுத்தி சாதகமான ஒரு உடன்பாட்டுக்கு வர எதிரியை நிர்ப்பந்திக்கும் ஒரு வழிமுறையாக இத்தகைய கொள்ளைகளை அவர்கள் பயன்படுத்தினர். இத்தகைய சூழலில் காவல்காரர்களின் பயன் என்பது புரிந்து கொள்ளத்தக்கதே. மறவர்கள் பெரும்பாலும் உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்வதில்லை.

அவர்களது காவல் திட்டம் - போலீசைப் போல ரோந்து சுற்றி வருவது - நூறு மறவர்கள் பத்து குழுக்களாகப் பிரிந்து பணியாற்றுவது - எனப் பலவாகும். ஒவ்வொரு குழுவும் ஒரு தனிப்பட்ட பணியைச் செய்யும். அவர்களுக்கு அவர்கள் காவல் பகுதியில் உள்ள மக்கள் ஊதியம் தந்தனர். பத்து ரூபாய்க்கு மேற்படாத பொருள் திருட்டுப் போனால் பத்து குழுக்களும் தலா ஒரு ரூபாய் வீதம் வழங்கி அதனை இழந்தவருக்கு வழங்குவர். திருட்டுப் பொருளின் மதிப்பு பத்து ரூபாயை விட அதிகமாகும்போது பத்துக் குழுக்களில் உள்ள நூறு மறவர்களும் இணைந்து அப் பொருளை மீட்பதற்காகத் திட்டமிடுவர். எனவே மறவர்கள் கொள்ளையடிப்பவர்களாப் பிறரால் கருதப்படவில்லை.

மறவர்களின் 'காவல்காரர்கள்' என்கிற அந்தஸ்து  அனைத்துச் சமூக மக்களாலும் அங்கீகரிக்கப்பட்டதாக இருந்தது. யாரும் அவர்களுக்குப் பயப்படவில்லை. நீண்ட நெடுங்காலமாகவே அவர்களுக்கு ஒரு தொகையை வழங்குவது என்பது பரம்பரையாக நடைமுறையாக இருந்தது. சட்ட விரோதமானதாகவே இருந்தாலும் கூட இந்தியாவில் சம்பிரதாயங்களுக்கு விரோதமாக நடப்பவர் யாரும் உண்டா? கிராமத்து மக்களால் ஆண்டுதோறும் வழங்கப்பட்ட மிகச் சிறிய தொகை அவர்களின் உடைமைகளைப் பாதுகாக்கப் பயன்பட்டதால் யாருக்கும் அது ஒரு சுமையாக இருக்கவில்லை. காவல் ஊதியத்தை ஒரு சட்டப்பூர்வமான ஏற்பாடாக நடைமுறைப்படுத்த முடியாததால் இவ் அமைப்பை பிற சாதி மக்கள் எதிர்க்கத் துணிவு கொண்டனர். அதைத் தொடர்ந்து வேலையிழந்த மறவர்கள் திருட்டுத் தொழிலில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். அவர்களின் திருட்டுகளினாலும், கொள்ளையினாலும் பிறரின் வெறுப்புக்கு ஆளாகி கள்ளன் எனும் சொல்லால் சுட்டப்பட்டு அவர்கள் பூர்வக்குடி கள்ளர்களாகக் கருதும் நிலை ஏற்பட்டது. 1886 இன் மெட்ராŠ நிர்வாக அறிக்கையின்படி, 'மக்களிடம் மறவர்களுக்கென்று ஒரு பேரும் பயமும் உருவாகியிருந்தது. அந்தப் பேரே அவர்களின் வன்முறைக் குற்றங்கள் வெற்றியடைய உதவின. மறவர்களை எதிர்ப்பது என்ற நினைப்பே வர விடாதபடி அந்தப் பேர் காத்தது. ஒவ்வொருவரும் மறவர்களைப் பற்றிய பயத்தோடே வளர்க்கப்படுகிறார்கள் .

'கள்ளர்கள், மறவர்கள், அகமுடையார்கள் ஆகியோரே தென் மாவட்டக் குற்றங்களுக்குப் ப

DNT மறவர் மக்களின் அவல நிலைகள்

DNT மறவர் மக்களின் அவல நிலைகள்
CT Act  (கைரேகை சட்டம்)
                             இன்று குற்றம் செய்யும் தனிநபர்கள் கோர்ட் உத்தரவுப் படி நிபந்தனை ஜாமினில் அல்லது 30நாட்கள் ஒரே ஊரில் கோர்ட்டில் கையெழுத்திடுவது போல் அன்று 1911ம் ஆண்டு எந்த ஒரு குற்றமும் செய்யாமல் ஒட்டுமொத்த மறவர்(DNT) சாதி மக்களும் அவர்கள் வாழும் இடத்தைவிட்டு வேறு இடத்திற்குச் செல்ல முடியாமால் 36 ஆண்டுகள் கிராம முன்சீப்(போலிஸ்) கண்காணிப்பில் வாழ்ந்து வந்தோம். மீறினால் சிறையில் அடைக்கப்படுவோம். சில கிராம மறவர்கள் போலிஸ் ஸ்டேஷனில் இரவு 11 மணிக்கும் காலை 4 மணிக்கும் கையெழுத்துப் போடும் கொடுமையும் இருந்தது. ஏகப்பட்ட மறவர்கள் மூணாறு, இலங்கை, பர்மா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நாடுகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களுக்கு அடிமைகளாக ஆங்கிலேயர்களால் கொண்டுசெல்லப்பட்டனர். போலிசுக்குப் பயந்து தப்பிச்சென்ற காடு, மேடுகளில் மற்ற மாவட்டங்களில் மறைவு வாழ்க்கை வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்த மறவர் மக்களுக்கு இன்றுவரை சொந்த மாவட்டம் இராமநாதபுரம், திருநெல்வேலி என்னும் பெயரைத் தவிர வேறு விவரம் தெரியாமல் மற்ற மாவட்டங்களில் வாழ்ந்து வருகிறார்கள்.
                           இந்தக் கடுமையான சட்டத்திற்கு பெயர்தான் CT Act (கைரேகை சட்டம்) என்ற குற்றப்பரம்பரைச் சட்டம். இந்த சட்டம் தேவரின் கடும் முயற்சியால் தமிழ்நாட்டில் மட்டும் சுதந்திரத்திற்கு முன் 1947ல் ஜூன் மாதம் நீக்கப்பட்டது.
                           இந்த கொடுமையான சட்டத்தால் பாதிக்கப்பட்ட மறவர் மக்களுக்காக  1942ம் ஆண்டு ஆங்கிலேய அரசு "மறவர் சீர்திருத்தத் திட்டம்" என்ற திட்டதின் மூலம் கட்டாயக்கல்வி, வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை, உழுவதற்கு இலவச நிலம், நிதி உதவிக்கு தனி சொசைட்டி போன்ற உதவிகளைக் கொடுக்க முயற்சித்தது. நிதிப் பற்றாக்குறையால் திட்டம் கைவிடப்பட்டது. இப்படித்தான் முதன்முறையாக மறவர் மக்கள் ஏமாற்றப்பட்டார்கள்.
                            சுதந்திரத்திற்குப் பின் 1952ம் ஆண்டு மத்திய அரசு அமைத்த அய்யங்கார் கமிசன் பரிந்துரைப்படி வட இந்தியாவில் சில மாநிலங்களில் DNT மக்களுக்கு மேலே சொன்ன அனைத்து சலுகைகளும் கிடைத்தன. ஆனால் தமிழ்நாட்டில் ஏற்கனவே ஆங்கிலேய ஆட்சியில் அனுபவித்து வந்த ஒருசில சாதிகளுக்கு மட்டும் தமிழக அரசு மீண்டும் கொடுத்தது. இதுவரை ஒரு சலுகையும் அனுபவிக்காத மறவர்கள் மீண்டும் இரண்டாவது முறையாக ஏமாற்றப்பட்டோம்.
                           மாறாக HOA பழக்கவழக்க குற்றவாளிகள் என்ற சட்டத்தை நம்மீது திணித்தார்கள். அந்த சட்டம் இன்றுவரை தொடர்கிறது. குற்றப் பரம்பரை என்ற பெயரை சீர்மரபினர் பழங்குடியினர்(DNT) என மாற்றினர்.குறிப்பிட்ட மாவட்டங்களில் வாழுகின்ற மறவர்களுக்கு DNT என்றும் ஏற்கனவே CT Actல் பாதிக்கப்பட்டுத் தப்பிச் சென்ற மற்ற மாவட்டங்களில் வாழும் மறவர்களுக்கு BC எனவும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆனால் கல்லூரியில் படிக்கும் DNT மறவர்களுக்கு மட்டும் தமிழக அரசு இலவச உயர்கல்வி அளித்தது. சரியான விழிப்புணர்வு இல்லாததால் அதைப்பற்றி நம் மக்களுக்கு( மறவர்) சரிவர தெரியவில்லை. அதுவும் ஏறக்குறைய ஏமாந்த நிலைதான்.
                           1970ல் தமிழக அரசு அமைத்த "சட்டநாதன் கமிசன்" பரிந்துரையில் "மறவர் சீர்திருத்தத் திட்டம்" அமைத்து மேலே சொன்ன அனைத்து சலுகைகளும் கொடுக்க பரிந்துரை செய்தும் தமிழக அரசு மறவர் மக்களுக்கு எந்தவொரு சலுகையும் கொடுக்கவில்லை. மூன்றாவது முறையாக ஏமாற்றப்பட்டோம்.

           1979ல் தமிழக அரசு, மத்திய அரசு கூறியது என்ற பொய்யான காரணத்தைக் கூறி DNCயாக மாற்றியதால் கல்லூரியில் படிப்பவர்களுக்கு இலவச உயர்கல்வி திட்டம் பறிபோனது. நான்காவது முறையாக ஏமாற்றப்பட்டோம்.
                            1989ல் MBCக்கு இணையாக DNCயை கருதி ஒட்டுமொத்தமாக 20% இட ஒதுக்கீடு தமிழக அரசு வேலைவாய்ப்புக்காகக் கொடுத்தது. இந்த MBC சலுகையை அனைத்து DNC சாதிகளும் தமிழகமெங்கும் அனுபவிக்கிறது. ஆனால் மறவர்கள் பொறுத்தமட்டில் குறிப்பிட்ட மாவட்ட மறவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. முதலில் நமக்கு பயனுள்ள திட்டமாக தெரிந்தாலும் அரணியல், அரசாங்க அதிகாரிகள், நல்ல கல்லூரி உடைய வன்னியர் போன்ற பெரிய சாதிகளோடு போட்டி போட முடியாமல் அரசு உத்தியோகங்களில் நமது மறவர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது. இதுவும் ஏறக்குறைய ஏமாற்று வேலைதான்.
                             2007ல் தமிழக அரசு DNC மக்களுக்காக "சீர்மரபினர் நலவாரியம்" என்ற திட்டம் ஆரம்பித்தது. இதில் நிறைய சலுகைகள் உள்ளன. ஆனால் சரியான விழிப்புணர்வு இல்லாததால் தமிழகம் முழுவதும் இன்றுவரை மறவர்கள் 500 பேர்கூட இதில் உறுப்பினராக இல்லை. வேதனைப்பட வேண்டிய விஷயம்.
                             2008ல் மத்திய அரசு பாலகிருஷ்ண ரெங்கி தலைமையில் நம் மக்கள் நலனுக்காக ஒரு ஆணையம் நிறுவியது. அது அரசியல், கல்வியில் 10% இட ஒதக்கீடு, இலவச வீட்டுமனை, தொழில் தொடங்க வட்டியில்லா கடன், தனி நிதி நிறுவனம் போன்ற திட்டங்களுடன் PCRக்கு இணையான சட்ட பாதுகாப்பு உள்ளிட்ட 76 பரிந்துரைகளை பார்லிமென்டில் சமர்ப்பித்தாலும் இன்றுவரை நிலுவையில் உள்ளது.
                             2015ல் மத்திய அரசின் பிகுராம்ஜி இடாடே தலைமையில் ஒரு ஆணையம் தமிழகமெங்கும் முக்கியமாக கீழத்தூவல், பசும்பொன் கிராமங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இடைக்கால பரிந்துரை செய்துள்ளது. அறிக்கையில் மாவட்டத்தில் ஒரு குறை தீர்க்கும் மையம், இலவச வீட்டுமனை போன்ற சில பயனுள்ள திட்டங்களை நமக்காக பரிந்துரை செய்தாலும் இன்னும் நிலுவையில் உள்ளது.
2015ல் மத்திய அரசு DNT மாணவர்களுக்கு அறிவித்த மூன்று பெரிய சலுகைகள்:
மாதம் 500 முதல் 1200 வரை உதவித்தொகை
ஒரு மாணவனுக்கு ரூ.3,50,000 செலவில் தங்குவதற்கு விடுதி வசதியும், பர்னிச்சருக்கு 30000
அயல்நாட்டுக் கல்வி முற்றிலும் இலவசம்
                           ஆனால் இந்த மூன்று சலுகைகள் இந்தியா முழுவதும் உள்ள DNT மாணவர்களுக்கு கிடைத்தாலும் தமிழக DNC மாணவர்களுக்கு மட்டும் கிடைக்கவில்லை. ஐந்தாவது முறையாக ஏமாற்றப்பட்டோம்.
                           எல்லாவற்றுக்கும் மேலாக தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஈஸ்வரய்யா பரிந்துரைப்படி 9% இட ஒதுக்கீடு சொல்லியும் இதுவரை கிடைக்கவில்லை.
                           ஆக 1911 முதல் இன்றுவரை ஆங்கிலேய மற்றும் இந்திய மத்திய, மாநில அரசுகளால் தொடர்ந்து நாம் ஏமாற்றப்பட்டுக்கொண்டே வருகிறோம்.

நமது கோரிக்கைகள்:
மாநிலம் முழுவதும் மறவர்களுக்கு மத்திய அரசின் 2008 ரெங்கி கமிஷன் பரிந்துரைப்படி ஒரே சாதிச் சான்றிதழ்(சீர் மரபினர்) வழங்க வேண்டும்.
மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் சீர் மரபினருக்கென்று தனியாக 11% இட ஒதுக்கீடு கொடுப்பது போல் தமிழகத்திலும் தனி இட ஒதுக்கீடு தரவேண்டும்.
DNCஐ DNTஆக மீண்டும் மாற்றி இலவச உயர்கல்வி கொடுக்க வேண்டும்.
கடந்த105 ஆண்டுகளாக ஏமாற்றத்தை மட்டும் சந்தித்த மறவர் சமுதாயமே!
விழித்தெழு! DNTக்கு போராடு!!
மக்களே ஒன்று சேர்வோம்!!! போராடுவோம்!!!
DNT பெற்றே தீருவோம்!!! இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவோம்!!!

Sunday, 16 April 2017

ஆப்பநாடு கொண்டையங்கோட்டை மறவர் கொத்தும் கிளையும் 1900களில்

ஆப்பநாடு கொண்டையங்கோட்டை மறவர் கொத்தும் கிளையும் 1900களில்
மிளகு கொத்து
   1.வீரமுடி தாங்கினான்
   2.சேதார்
   3.சேமந்தா.
வெற்றிலை கொத்து
  1.அகஸ்தியர்
   2.மருவீடு
  3.அழகிய பாண்டியன்
தென்னங்கொத்து
  1வாணியன்
  2.வேட்டுவர்
. 3.நடைவேந்தர்
குமுகம் கொத்து
  1.கேல்நம்பி
  2.அன்புதரன்
  3.கௌதமன்
ஈச்சங்கொத்து
  1.சடச்சி
  2.சங்கரன்
  3.பிச்சிபிள்ளை
பனங்கொத்து
.  1.அகிலி
2.லோகமூர்த்தி
. 3.ஜாம்புவர்
ஆதாரம் Edgar Thurston
Castes and Tribes 1900களில்
பொது செயலாளர்
சீரமரபினர் நலச்சங்கம்
மாரிமுத்து தேவர்

Monday, 3 April 2017

பொன். பாண்டித்துரைத் தேவர்



பொன். பாண்டித்துரைத் தேவர்
பிறப்பு :21.03.1867 இராமநாதபுரம், தமிழ்நாடு, இந்தியா
இறப்பு : 02.12.1911 இராமநாதபுரம், தமிழ்நாடு, இந்தியா
இருப்பிடம்: இராமநாதபுரம், தமிழ்நாடு, இந்தியா
நாடு: இந்திய தமிழர்
கல்வி: தமிழ் பண்டிதர்
பணி: பாலவனத்தம் ஜமிந்தார்
அறியப்படுவது: நான்காம் தமிழ்ச் சங்கம் நிறுவியமை
பட்டம்: வள்ளல்
சமயம்: சைவம்
பாண்டித்துரைத் தேவர் (மார்ச் 21, 1867 - டிசம்பர் 2, 1911; பாலவ நத்தம், தமிழ்நாடு) நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த அமைப்பாளர்களில் ஒருவரும், தமிழறிஞரும் ஆவார். இவரே நான்காம் தமிழ்ச் சங்கத்தின் முதல் தலைவராகப் பணியாற்றினார். இவர் செந்தமிழ் (இதழ்) என்னும் இதழ் வெளியிடவும், 'கப்பலோட்டிய தமிழர்' வ.உ.சி யின் சுதேசிக் கப்பல் விடும் பணிக்கும் பொருள் உதவி நல்கினவர்.
பாண்டித்துரைத் தேவர் பாலவநத்தம் ஜமிந்தார் என்றும், மதுரைத் தமிழ்ச்சங்கத் தலைவர் என்றும், தலைமைப் புலவர் என்றும், செந்தமிழ்கலாவிநோதர் என்றும், செந்தமிழ் பரிபாலகர் என்றும், தமிழ் வளர்த்த வள்ளல் என்றும், பிரபுசிகாமணி என்றும், செந்தமிழ்ச் செம்மல் என்றும் அழைக்கப்பட்டவர். மூவேந்தரும் போய் முச்சங்கமும் போய்ப் பாவேந்தருங் குறைந்து பழைய நூலுரைகளும் மறைந்து படிப்பாருமின்றிக் கேட்பாருமின்றித் தமிழ்க் கல்வி மழுங்கிவரும் காலகட்டத்தில் மதுரை மாநகரில் தமிழ்ச்சங்கங் கூட்டியும், அருந்தமிழ் நூல்களை ஈட்டியும், படித்து வல்லவராவர்க்கு பரிசில் கொடுத்தும், செந்தமிழ் என்னும் மாசிக வாசிக பத்திரிகையை வெளிவிடுத்தும், இப்படிப் பலவாறான தமிழ்த் தொண்டினை திறம்படச் செய்த செந்தமிழ் ஆர்வலராவார்.
பிறப்பு:
புகழ் பூத்த தேவர் மரபில் தோன்றிய பொன்னுசாமித் தேவருக்கும் முத்து வீராயி நாச்சியாருக்கும் மூன்றாவது மகனாக 1867ஆம் ஆண்டு பங்குனி 21ஆம் நாள் பிறந்தார்.பொன்னுசாமித் தேவரவர்கள் இராமநாதபுர மன்னருக்கு அமைச்சராகயிருந்தவர்.இவர் சிறுவராக இருக்கும் போதே தந்தையை இழந்தமையால், சேஷாத்திரி ஐயங்கார் என்பவரின் மேற்பார்வையில் வளர்ந்தார். இக்காலகட்டத்தில் அழகர் ராஜ் என்ற தமிழ்ப் புலவர் இவரின் தமிழ் ஆசானாகவும் மற்றும் வழக்குரைஞர் வெங்கடேஸ்வர சாஸ்த்திரி இவரின் ஆங்கில ஆசிரியராகவும் இருந்தனர். இவர்களிடம் இருந்து மிக்க ஆர்வத்தோடு கற்ற தேவர், இரு மொழியிலும் நல்ல தேர்ச்சி எய்தி இராமநாதபுரத்தில் சிவர்டிஸ் என்ற ஆங்கிலேயாரால் நடத்தப்பட்ட உயர்பள்ளியில் மேல்கல்வி கற்றார்.

சேஷாத்திரி ஐயங்காரால் மேற்பார்வை செய்யப்பட்ட தேவரின் சொத்துக்கள் எல்லாம் இவர் பதினேழு வயதை அடைந்ததும் இவரிடமே கையளிக்கப்பட்டன. இச்சொத்துக்களில் பாலவநத்தம் ஜமீனும் அடங்கும். இளம் வயதில் தமிழில் நல்ல தேர்ச்சியும் ஆர்வமும் பெற்றிருந்த தேவர், அதன் வளர்ச்சிக்காக தன் உடல், உயிர், பொருள் எல்லாவற்றையும் அர்ப்பணித்தார் என்றால் மிகையாகாது. இக்காலகட்டத்தில் தேவரின் நெருங்கிய உறவினராகிய பாஸ்கர சேதுபதி அவர்கள் இராமநாதபுர அரியணையில் அமர்ந்து, இவரின் தொண்டுகளுக்கு துணை புரிந்தார் என்பர்.

தமிழ்த்தொண்டு:
அக்காலத்தில் அரிய தமிழ் நூல்களைக் கண்டெடுத்து, அவை அழியா வண்ணம் அச்சிட்டு வந்த சாமிநாதையருக்கு உதவும் பொருட்டு தேவர் அவர்கள், அவரை இராமநாதபுரம் வரவழைத்துக் கௌரவித்து மணிமேகலை, புறப்பொருள் வெண்பாமாலை போன்றவற்றை அச்சிட பொருளுதவி செய்தார். தனது ஆசிரியர் ஒருவரான இராமசாமிப்பிள்ளை என்றழைக்கப்படும் ஞான சம்பந்தப்பிள்ளை மூலம் தேவாரத் தலைமுறை பதிப்பையும், சிவஞான சுவாமிகள் பிரபந்தத் திரட்டையும் பதிப்பித்து வெளியிட்டார். பிற மதத்தவரின் சைவ எதிர்ப்புப் போக்கை மறுக்கும் பொருட்டு கோப்பாய் சபாபதி நாவலர் மூலம் மறுப்பு நூல்கள் வெளியிட்டார். மேலும் தண்டியலங்காரம் போன்ற சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர் அவர்களின் நூல்களுக்கும், தேவர் அவர்கள் பதிப்பிக்கும் பொருட்டு உதவி புரிந்திருந்தார். குமாரசுவாமிப்புலவர், தேவரால் தொகுக்கப்பட்ட சைவமஞ்சரிக்கு வழங்கிய சிறப்புப்பாயிரம் இவரின் சிறப்பை நன்கு புலப்படுத்தும்.
சைவமஞ்சரி சிறப்புப்பாயிரத்தை கீழே காட்டுதும்:-
திக்குலவும் புகழாளன் பிரபுகுல சிகாமணியாய்ச் சிறந்த சீலன்
அக்கிரகண் ணியன்பொன்னு சாமியெனு நரபால னருளும் பாலன்
நக்கனடி யாவர்பாலன் பேறுளத்தன் வெண்ணீறு நண்ணும் பாலன்
தக்கபொரு   ணிலவுகலை வினோதனுயர் சற்சங்க சனானு கூலன் .
பூதேவன் புகலியர்கோன் முதலறிஞர் தமிழ்நூலின் பொருள்க ளுள்ள
மீதேவன் பறமருவப் பதித்தேவன் றேவனெனும் வெளிறு நீங்கி
நீதேவ னெனக்கொண்டு நிலத்தேவன் பகைகடந்து நெறிநின் றீசன்
மாதேவன் பதத்தேவன் மகிழ் பாண்டித்துரைத்தேவ மன்னன் மாதோ

நான்காம் தமிழ்ச்சங்கம்:
மதுரை மாநகரில் தேவர் தங்கியிருந்த போது, அவ்வூர் அறிஞர்கள் "தமிழ்ச் சிறப்பு" பற்றி சொற்பொழிவாற்றும்படி வேண்டிக் கொண்டனர். இதற்கு இணங்கிய தேவர், உரைக்கு வேண்டிய ஆராய்ச்சி செய்யும் பொருட்டு, திருக்குறள், கம்பராமாயணம் போன்ற நூல்களை ஈட்ட முயற்சித்த போது, அங்காடிகள், நூலகங்கள் மற்றும் அறிஞர்களின் மனைகளிலிருந்தும் பெற முடியவில்லை. இந் நிகழ்வு தேவரின் உள்ளத்தை மிக கடுமையாகப் பாதித்தது. பண்டைக்காலம் முதல் தமிழ்ச் சங்கங்கள் கூடிய மதுரை மூதூருக்கும், அங்கு வளர்ந்த தமிழுக்கும் ஏற்ப்பட்ட துன்பியல் நிலையை எண்ணி இவர் உள்ளம் வேதனையுற்றது. இந் நிலையை மாற்றும் நோக்குடன் மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தை நிறுவத் திட்டமிட்ட தேவர் அவர்கள், தனது திட்டத்தை 1901 ஆம் ஆண்டு வைகாசி மாதம் சென்னையில் கூடிய மாகாண அரசியல் மாநாட்டில் அவையோர் முன் வேண்டுகோளாக முன்வைத்தார். அம்மாநாட்டில் நான்காம் தமிழ் சங்கம் மதுரையில் நிறுவுவது என்று திர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில் உடனடியாகவே நான்காம் தமிழ் சங்கம் நிறுவப்பட்டு செயல்பட தொடங்கியது. இத் தமிழ் சங்கதிற்கு தலைவராக தேவரே பொறுப்பேற்று சங்கத்தை கட்டியெழுப்பும் பொருட்டு அயராது செயல்பட்டார். மேலும் தமிழகம் மற்றும் ஈழம் முதலிய நாடுகளிலிருந்து தமிழ் வல்லுனர்களை அழைத்து, சங்கத்தில் அங்கத்தவராக்கி எதிர்கால தமிழ் வளர்ச்சிக்கு வழிவகுத்தவர் தேவராவார்.தமிழன்னைக்கு மேல் கூறிய தொண்டுகள் மட்டுமல்லாது, செய்யுள் இயற்றித் தொண்டாற்றும் புலமையும் ஆற்றலும் தேவரவர்களிடம் இருந்தது, இதற்கு சான்றாக சிவஞானபுர முருகன் காவடிச்சிந்து, சைவ மஞ்சரி, இராஜராஜேஸ்வரிப் பதிகம், பன்னூல் திரட்டு மற்றும் பல தனி நிலைச் செய்யுள்களும் பல சிறப்பாயிரங்களும் திகழ்கின்றன. தமிழுக்கு மட்டும் அல்லாது பிற நற்பணிகளுக்கும் பொருளுதவி செய்யும், வழக்கம் உடைய வள்ளலாக வாழ்ந்த தேவரவர்கள், வ. உ. சிதம்பரம்பிள்ளை அவர்கள் சுதேசி நாவாய்ச் சங்கம் நிறுவதற்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து உதவியது குறிப்பிடத்தக்கது. தமிழின் உயர்வுக்காக உறங்காது உழைத்த உத்தமர், 1911ஆம் ஆண்டு மார்கழி மாதம் இரண்டாம் நாள் வள்ளல் பாண்டித்துரைத் தேவர், உயிர் துறந்ததை எண்ணி தமிழ் உலகம் வருந்தியபோதும், அவரால் உருவாக்கப்பட்ட நான்காம் தமிழ் சங்கம் நூறாண்டுகளுக்கு மேலாக தமிழ்த் தொண்டாற்றி வருவது தேவரவர்களின் உண்மைத் தமிழ்ப் பற்றுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

ஆப்பநாடு கொண்டையங் கோட்டை மறவர் பெயர்க் காரணம்: மறவர் சாதியில் பல உட்பிரிவுகளில் ஒன்றுதான் ஆப்பநாடு கொண்டையங் கோட்டை மறவர் என்பது. கொண்டை...